ஓடும் பேருந்திலிருந்து அடுத்தடுத்து விழுந்த மாணவர்கள் - அதிர்ச்சி வீடியோ

படியில் பயணம் செய்த மாணவர்கள் பேருந்திலிருந்து விழும் அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது.

Written by - க. விக்ரம் | Last Updated : Apr 18, 2022, 11:31 AM IST
  • படியில் பயணம் செய்யும் மாணவர்கள்
  • பேருந்திலிருந்து கீழே விழுந்த மாணவர்கள்
  • பள்ளி மாணவர்களுக்கு காயம்
ஓடும் பேருந்திலிருந்து அடுத்தடுத்து விழுந்த மாணவர்கள் - அதிர்ச்சி வீடியோ title=

தென்காசி மாவட்டம் தமிழக கேரள எல்லைப்பகுதியான புளியரை பகுதியில் இருந்து பல மாணவ மாணவிகள் கல்லூரி மற்றும் பள்ளிக் கல்விக்காக தென்காசி மற்றும் செங்கோட்டைக்கு வந்து செல்கின்றனர்.

அடிக்கடி பேருந்துகள் இருந்தும் இந்த வழியாக செல்லும்  சில பேருந்துகளில் மாணவர்கள் படிக்கட்டுகளில் பயணிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

மேலும் படிக்க | நெல்லை: ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் வெட்டிக்கொலை.. பதற்றம் நிலவுவதால் போலீஸ் குவிப்பு!

இந்த நிலையில் இன்று காலை புளியரையில் இருந்து தென்காசி நோக்கி சென்ற பேருந்தில் மாணவ மாணவிகள் பயணித்துள்ளனர் . கூட்டம் இருந்தாலும் பேருந்தின் நடுப்பகுதியில் இடம் இருந்துள்ளது. ஆனால் மாணவர்கள் பலர் படிக்கட்டில் தொங்கியபடி பயணித்துள்ளனர் .

இந்த பேருந்து செங்கோட்டை கட்டளை குடியிருப்பு pvt மில் பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது அதில் சாகசம் செய்த மாணவர்கள் இருவர் ஒன்றன் பின் ஒன்றாக தவறி விழுந்தனர்.

 

விழுந்த மாணவர்கள் சாலை ஓரத்தில் உருண்டதால் பின்னால் வரும் வாகனத்திலிருந்து தப்பியுள்ளனர். உடனடியாக லேசாக காயமடைந்த மாணவர்கள் இருவரையும் இரு சக்கர வாகனத்தில் சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். இதில் ஒரு மாணவர் ஐடிஐ படிக்கும் மாணவர் முருகன் என்பது தெரியவந்தது.மற்றொருவர் யாரென விசாரித்து வருகின்றனர்

 

மேலும் படிக்க | ‘கை கால்கள் உடைந்தால்’ போலீஸ்தான் காரணம் - கதறிய ரவுடி ‘மதுரை பாலா’..!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News