விபத்தில் பெற்றோரை இழந்த மாணவிக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கிய மாவட்ட ஆட்சியர்..!

சேலம் கல்பாரப்பட்டி அருகே பெற்றோர்களை இழந்த மாணவிக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இலவச வீட்டு மனை பட்டா. 

Written by - Yuvashree | Last Updated : Jul 3, 2023, 01:59 PM IST
  • சேலம் மாவட்டத்தை சேர்ந்த மாணவி அமுதா.
  • சாலை விபத்தில் பெற்றோரை இழந்தார்.
  • இவருக்கு பல்வேறு வழிகளில் பலர் உதவிகள் செய்கின்றனர்.
விபத்தில் பெற்றோரை இழந்த மாணவிக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கிய மாவட்ட ஆட்சியர்..! title=

சேலம் மாவட்டத்தை சேர்ந்த மாணவி ஒருவர் சில நாட்களுக்கு முன்னர் தனது பெற்றோரையும் உடன் பிறந்தவரையும் சாலை விபத்தில் இழந்துவிட்டார். இவருக்கு தமிழகத்தின் அனைத்து திசைகளில் இருந்தும் பலர் உதவிகள் செய்கின்றனர். தற்போது, அம்மாவட்டத்தின் ஆட்சியரும் இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. 

பெற்றோர் உயிரிழப்பு..

சேலம் மாவட்டம் கல்பாரப்பட்டியைச் சேர்ந்தவர் வெங்கடாசலம் தறி தொழிலாளியான இவரது மனைவி மாரியம்மாள் இவர்களுக்கு பூங்கொடி மற்றும் அமுதா ஆகிய இரண்டு பெண்கள் இருந்தனர் இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் தன்னுடைய மாமியார் வீட்டுக்கு செல்வதற்காக வெங்கடாஜலம் அவரது மனைவி மாரியம்மாள் மகள் பூங்கொடி ஆகியோர் ஒரே இருசக்கர வாகனத்தில் மல்லூர் வரை சென்று திரும்பியபோது கார் மோதி விபத்துக்குள்ளாகி மூன்று பேரும் பரிதாபமாக  பரிதாபமாக உயிரிழந்தனர். இளைய மகள் அமுதா மட்டும் வீட்டில் இருந்ததால் உயிர் தப்பினார். பிளஸ் 2 பொது தேர்வில் அமுதா அதிக மதிப்பெண் எடுத்துள்ளார். ஆனால், பெற்றோரை இழந்ததால் அவரால் மேற்படிப்பை தொடர முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் அவர்பலரிடமும் உதவி கோரியுள்ளார். 

மேலும் படிக்க | கலை, அறிவியல் கல்லூரிகளில் முதலாமாண்டு வகுப்புகள் தொடக்கம்

மாணவி உதவி கோரியதை அடுத்து சமூக ஆர்வலர்கள் சிலர் அவருக்கு கல்லூரியில் சேர உதவி செய்தனர். இந்த செய்தி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரை பரவியதையடுத்து சம்பந்தப்பட்ட மாணவிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய மாவட்ட நிர்வாகத்திற்கு அவர் உத்தரவிட்டார்.

சேலம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சம்பந்தப்பட்ட மாணவியை நேரில் அழைத்து அவருக்கு மாவட்ட ஆட்சியர் ஆறுதல் தெரிவித்ததோடு தேவையான அனைத்து உதவிகளும் செய்வதாகவும் மூன்று ஆண்டுகளுக்கான கல்வி கட்டணம் மற்றும் விடுதி கட்டணத்திற்கான செலவை ஏற்பதாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் உறுதி அளிக்கப்பட்டது

மாணவி அமுதா தனியார் கல்லூரியில் சேர்க்கப்பட்டு தற்போது படித்து வருகிறார். இந்த நிலையில் அவருக்கு மருத்துவ உதவி  குடியிருக்க வீடு வேண்டுமென கோரிக்கை விடுத்ததையடுத்து மாணவிக்கு வீடு கட்டிக் கொள்ள வீரபாண்டி கல்பாரப்பட்டியில் இலவச வீட்டுமனைக்கான ஆணையை மாவட்ட ஆட்சியர் வழங்கியுள்ளார். அதுமட்டுமன்றி அவர் வீடு கட்டிக்கொள்ள போதுமான நிதியையும் மாவட்ட ஆட்சியர் ஒதுக்கீடு செய்தார். சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகாமில் மாவட்ட ஆட்சியர் மாணவி அமுதாவுக்கு வீடு கட்டுவதற்கான ஆணையினை வழங்கினார்.

பெயரை பயன்படுத்தி பணம் பறிப்பு..

மாணவி அமுதா வீட்டுமனை பட்டாவினை வாங்கிய பிறகு செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது பேசிய அவர், தனது கோரிக்கையை ஏற்று பல்வேறு தரப்பினர் தனக்கு நேரடியாக மறைமுகமாக உதவி செய்து வருகின்றனர் என்று கூறினார். ஆனாலும் எனது பெயரை தவறாக பயன்படுத்தி சிலர் பணம் பறிப்பு நோக்கில் செயல்பட்டு வருவதாக தகவல் வந்துள்ளது இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டுள்ளதாகவும் எனவே தனக்கு உதவுபவர்கள் எந்த உதவியாக இருந்தாலும் நேரிலே வந்து வழங்கினால் மிகவும் மகிழ்ச்சி அடைவதாக அவர் தெரிவித்தார்.

பிரபலங்கள் உதவி..

மாணவி அமுதாவிற்கு அரசியல் பிரமுகர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் மட்டுமன்றி பல திரைப்பிரபலங்களும் உதவியுள்ளனர். பிரபல இசையமைப்பாளர் டி.இமான், ராகவா லாரன்ஸ் பாேன்ற பலரும் மாணவியை தொடர்பு கொண்டு உதவி தேவை என்றால் தயங்காமல் கேட்குமாறு அவர் சில நாட்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட பேட்டியில் தெரிவித்திருந்தார். 

மேலும் படிக்க | அதிமுகவின் மதுரை மாநாடு: எஸ்.பி.வேலுமணி சூளுரை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News