இலங்கை கடற்படையினரால் கைது ஆன தமிழக மீனவர் தற்கொலை முயற்சி!!

Last Updated : Mar 4, 2017, 11:02 AM IST
இலங்கை கடற்படையினரால் கைது ஆன தமிழக மீனவர் தற்கொலை முயற்சி!!

இலங்கை திரிகோணமலையில் சிறைவைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களில் ஒருவர் தற்கொலைக்கு முயற்சி செய்ததாக தகவல் வந்து உள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டம் அக்கரைப்பட்டியைச் சேர்ந்த எட்டு மீன்வர்கள் நேற்று இரவு பாம்பன் பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது, அவர்களை இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட எட்டு மீனவர்களையும் திரிகோணமலையில் சிறை வைக்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் கண்ணாடி பாட்டிலை உடைத்து தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவர் திரிகோணமலையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

கடந்த 2 நாட்களில் இலங்கை கடற்படையினர் கைதுசெய்து சிறைவைத்துள்ள தமிழக மீனவர்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட அனைத்து மீனவர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி பாம்பன் பகுதி மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

More Stories

Trending News