தமிழகத்தை அடுத்த 3 தினங்களுக்கு சுட்டெறிக்க காத்திருக்கும் வெயில்!

உள் தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 3 தினங்களுக்கு இயல்பைவிட ஒரு சில இடங்களில் வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது!

Last Updated : Mar 22, 2019, 03:51 PM IST
தமிழகத்தை அடுத்த 3 தினங்களுக்கு சுட்டெறிக்க காத்திருக்கும் வெயில்! title=

உள் தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 3 தினங்களுக்கு இயல்பைவிட ஒரு சில இடங்களில் வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது!

தமிழகம் மற்றும் புதுவையின் ஒருசில இடங்களில் அடுத்த 3 நாட்களுக்கு இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் வரும் 25-ஆம் தேதி வெப்பத்தின் தாக்கம் இயல்பை விட அதிகமாக இருக்கும். சென்னையில் அதிகபட்சமாக 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்சமாக 26 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை பதிவாகும். தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது ' என்று கூறியுள்ளது.

தமிழ்நாட்டின் வெப்பநிலை பொருத்த வரை சில பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 2-3 டிகிரி செல்சியஸ் அதிகமாகவே இருக்கும். இதேநிலை தான் நாளையும் தமிழகத்தில் தொடரும். அடுத்த 24 மணி நேரத்திற்கு வானிலை பொதுவாக மேகமூட்டமாக இருந்தாலும், சென்னையில் அதிகபட்சமாக 34 டிகிரி செல்சியஸ் வரை கூடலாம், குறைந்தபட்சம் 26 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தென் இந்தியாவை பொருத்த வரை தமிழ்நாடு, கரையோர ஆந்திரா, ராயலசீமா, தெலுங்கானா மற்றும் வட கர்நாடக என சில பகுதிகளில் 2-3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகபட்சமாக காணப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Trending News