அண்ணாமலை ஒரு கத்துக்குட்டி.. பூஜ்ஜியம், பாஜக வெற்றி பெறாது - எஸ்வி சேகர்

தமிழகத்தில் பா.ஜ.கவுக்கு ஒருதொகுதிதான் என கூறிய எஸ்வி சேகர், அண்ணாமலை சொல்வதுபோல், தமிழகத்தில், பா.ஜ.க கட்சி, 40க்கு 40 தொகுதிகளில் வெற்றி பெற முடியாது என தெரிவித்துள்ளார்.  

Written by - Karthikeyan Sekar | Last Updated : Feb 4, 2024, 09:12 AM IST
  • தமிழ்நாடு பாஜக வெற்றி பெறாது
  • அண்ணாமலை ஒரு கத்துக்குட்டி
  • அவர் அரசியலில் ஜீரோ என எஸ்வி சேகர் விமர்சனம்
அண்ணாமலை ஒரு கத்துக்குட்டி.. பூஜ்ஜியம், பாஜக வெற்றி பெறாது - எஸ்வி சேகர்

நாகை மாவட்டத்தில் உள்ள நாகூர் தர்காவின் தலைவர் மகள் திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக நடிகரும் பாஜக நிர்வாகியான எஸ்வி சேகர் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார். திருச்சி ஶ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், அரசியலுக்கு வரும் நடிகர் விஜய், முதல் முதலாக தேர்தலில் போட்டியிடும் போது, தனித்து நின்று ஓட்டு வங்கியை நிரூபித்து விட்டால், அதன் பின் பெரிய எதிர்காலம் இருக்கும் என கூறினார். முதல் தேர்தலிலேயே கூட்டணிக்குள் சென்று விட்டால், தனித்த ஓட்டு வங்கியை கண்டுபிடிப்பது கஷ்டமான செயலாகி விடும் என்றும், அவர் விரும்பியதை தமிழக அரசியலில் செய்ய முடியுமா? என்பதையும் யோசித்து பார்க்க வேண்டும் எனவும் எஸ்வி சேகர் கூறினார்.

Add Zee News as a Preferred Source

தொடர்ந்து பேசிய அவர், " அவருக்கான ரசிகர் மன்ற கட்டமைப்பு பலம், அதை எப்படி அரசியல் கட்டமைப்பாக மாற்றப் போகிறார் என்பதை பொறுத்திருந்த தான் பார்க்க வேண்டும், எம்.ஜி.ஆர்., சிவாஜி என்றெல்லாம் எடுக்கக் கூடாது. எம்.ஜி.ஆர் பெரிய கட்சியில் இருந்து அதன் வளர்ச்சிக்கு உழைத்து, அங்கு கருத்து வேறுபாடு காரணமாக, வேறு கட்சி ஆரம்பித்தபோது, மக்கள் பெரிதாக ஏற்று கொண்டனர். அதனால் மாபெரும் கட்சியானது. ஒரு எம்.ஜி.ஆர் தான் இருக்க முடியும். லோக்சபா தேர்தலில், பா.ஜ.க கட்சி 300 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று, 3வது முறையாக மோடி பிரதமராவார். வட இந்தியாவில், ராமர் அவருக்கு அந்த ஆசிர்வாதம் கொடுப்பார்.

மேலும் படிக்க | பாஜக கூட்டணிக்கு நோ சொன்ன எடப்பாடி, டெல்லி பறந்த ஜி.கே.வாசன்..!

லோக்சபா தேர்தலில், தமிழகத்தில், அண்ணாமலையின் பங்களிப்பு பூஜ்யமாகத்தான் இருக்கும். அவருடைய நடைபயணம் கேலிக்குரியதாக உள்ளது. குழந்தைத் தனமான அரசியல்வாதியான அண்ணாமலைக்கு கட்சியை வளர்க்கும் திறமை பூஜ்யம் தான். அதன் ‘ரிசல்ட்’ மே மாதத்தில் தெரியும். அதிமுக -வுடன் கூட்டணி இருக்கக் கூடாது என்று தான் அண்ணாமலை வேலை செய்தார். அந்த வேலை நிறைவேறி விட்டது. அதன் பலன், இந்த தேர்தலில் தெரிந்து விடும்.

பா.ஜ.கவின் 3 சதவீதம் ஓட்டு வளர்ச்சி மே மாதம் தான் தெரியும். அண்ணாமலை பா.ஜ.கவுக்கு எதிராக செயல்படுகிறார் என்றே சொல்கிறேன். பாஜக தலைவர்  அண்ணாமலை சொல்வது போல், 40 க்கு 40 தொகுதிகளில் வெற்றி பெற முடியாது. ஒரு தொகுதி வேண்டுமானால் கிடைக்கும். விகிதாச்சார அடிப்படையில் ஓட்டுக்களை கணக்கிட்டால், கூட்டணி பலம் தான் தேர்தலில் வெற்றி பெற வைக்கும். தேர்தல் காலத்தில், உயிரிழப்பு ஏற்பட்டால் தான் அனுதாப அலை ஏற்படும். மற்ற நேரங்களில் அனுதாப அலை வேலை செய்யாது. மோடி அரசின் திட்டங்களை, மக்களிடம் அண்ணாமலை சரிவர எடுத்துச் செல்லவில்லை. அண்ணாமலை போன ரூட்டு தவறாகி விட்டது. 

அவர் நடை பயணம் செல்வதால், வரும் கூட்டம் வாக்கு வங்கியாக மாறாது. என்னை பார்க்க வரும் கூட்டம் எல்லாம் வாக்குகளாக மாறும் என்று நினைத்தால், எனக்கு ஏதோ வேறு கோளாறு என்று அர்த்தம். சென்னை மயிலாப்பூரில் ஒரு முறை சட்டமன்ற உறுப்பினர் ஆக இருந்த போது, ஒரு பைசா கூட கமிஷன் வாங்காமல், 300 கோடி ரூபாய்க்கு வேலை செய்துள்ளேன். பாராளுமன்றத்திலும், சட்டசபையிலும், நாட்டில் இருக்கும் ஒவ்வொரு ஜாதிக்கும் ஒரு பிரதிநிதி இருக்க வேண்டும். பிராமணர்களுக்கு ஒரு பிரதிநிதி கூட இல்லாததால், அவர்கள் தேர்தலில் போட்டியிட உள்ளனர். 

தினசரி வாழ்வாதாரத்துக்காக போராடும் பிராமணர்கள், 30 லட்சம் பேர் உள்ளனர். அவர்களுக்கு அடிப்படையான சமூக நீதி கிடைக்காவிட்டால், அவர்கள் வாக்கை நோட்டாவுக்கு போட்டு விடுவார்கள். மோடியின் புகழை உயர்த்த பாடுபடாமல், அண்ணாமலை தன் புகழை உயர்த்திக் கொள்ள பாடுபடுவதால், எத்தனை தொகுதி கிடைக்கும் என்பது தேர்தலில் தெரியும்.  சிறந்த கொள்கைளோடு ஊழல் குற்றச்சாட்டுகள் இல்லாத பா.ஜ.க கட்சியை பெரிய அளவில் எடுத்துச் செல்லும் முயற்சிகளை கத்துக்குட்டி அண்ணாமலை செய்யவில்லை" என எஸ்வி சேகர் கூறினார். 

 

மேலும் படிக்க | 80 நாட்களுக்குள் அரை டஜன் அமைச்சராவது சிறைக்கு போவார்கள்! ஆருடம் சொல்லும் பாஜக!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

...Read More

Trending News