மங்களம் பொங்கும் கார்த்திகை மாத பிறப்பு இன்று..!!!

ஐயப்பன் சிவன்,விஷ்ணு இருவரின் அம்சமாக கருதப்படுகிறார்.12 வயதில் உலக நன்மைக்காக காட்டில் தவக்கோலத்தில் அமர்ந்து தியானத்தில் ஆழ்ந்தவர் ஐயப்பன். 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Nov 17, 2021, 01:02 PM IST
  • ஐயப்பன் சிவன்,விஷ்ணு இருவரின் அம்சமாக கருதப்படுகிறார்.
  • 12 வயதில் உலக நன்மைக்காக காட்டில் தவக்கோலத்தில் அமர்ந்து தியானத்தில் ஆழ்ந்தவர் ஐயப்பன்.
  • ஐயப்பன் சிலையை நிறுவியவர் விஷ்ணுவின் அவதாரமாகிய பரசுராமர்.
மங்களம் பொங்கும் கார்த்திகை மாத பிறப்பு இன்று..!!! title=

ஐயப்பன் ஞானத்தை வழங்க கூடியவர். ஆயுளை நீடித்து தர வல்லவர். 48 நாள் விரதம் அதுவும் குளிர்காலத்தில் என்பது மன வைராக்கியம் இருப்பவருக்கே சாத்தியம். அப்படி விரதம் இருந்து வழிபடும் போது உங்களுடைய பல அஷ்டம சனி,ஜென்ம சனி கண்டங்கள், தோசங்கள் தொலைகின்றன. காரணம் அப்போது வனவாசம் போவது போல ,சந்நியாசம் வாங்குவது போல சபரிமலைக்கு போவது மிக கடினமான ஒன்றாக இருந்தது. 

கறுப்பு வேட்டி அணிந்து செல்வதும் காவி வேட்டி அணிந்து சாமியார் போல வீட்டில் விரதத்தில் இருக்கும்போது பல தோசங்கள் அடிபடும். மனதில் ஆழமாக வழிபடும்போதுதான் உங்கள் பிரார்த்தனைகள் உடனே பலிக்கும். அதற்கு கடுமையான விரதம் தான் துணை புரியும். நெஞ்சு முட்ட சாப்பிட்டு விட்டு சாமி முன்பு நின்றால் ஏப்பம்தான் வரும்.

இன்று, 48 நாட்கள் விரதம் என்பது சுருங்கி ஒருநாள் விரதம், மாலை என ஆகிக்கொண்டிருக்கிறது. 48 நாட்கள் நீங்கள் விரதம் இருந்து, இருவேளை குளிர்நீர் குளியல் என இருந்தால் தான், உங்கள் உடல், மனம் இவற்றில் பல மாறுதல்கள் உண்டாகும். மனமும் உடலும் உறுதியாகும். குடியை விட்டு விரதம் இருந்து, அதன் பின் குடிக்காதவர்கள் பலர் உண்டு.

48 நாள் நல்ல பழக்கங்களுடன் இருந்தால் அதுவே தொடர் பழக்கமாகிவிடும். இதற்குதான் ஒரு மண்டல விரதம். அரை மண்டலம் கால் மண்டல விரதம் எல்லாம் இப்போது வந்த விஷயங்கள். அதற்கெல்லாம் பலன் ஏதும் இருக்காது.

ஐயப்பன் சிவன், விஷ்ணு இருவரின் அம்சமாக கருதப்படுகிறார். ஐயப்பன் சிலையை  நிறுவியவர் விஷ்ணுவின் அவதாரமாகிய பரசுராமர். 12 வயதில் உலக நன்மைக்காக காட்டில் தவக்கோலத்தில் அமர்ந்து தியானத்தில் ஆழ்ந்தவர் ஐயப்பன். அவர் 18 சித்தர்களின் நண்பர். சித்தர்களுடன் அவர் உரையாடும் இடம் இன்றும் சித்ரகூடம் என அழைக்கப்படுகிறது!!

Trending News