தமிழகத்தில் வரும் மக்களவை தேர்தலுடன் 18 தொகுதிக்கான சட்டசபை இடைத்தேர்தலும் நடைபெற உள்ளது. இதனால் தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் தங்கள் தொகுதிக்கான வேட்பாளர்களை அறிவித்து வருகிறது. அந்தவகையில் தமிழகத்தின் பிரதான இரண்டு கட்சிகளான அதிமுக மற்றும் திமுக தங்கள் வேட்பாளர்கள் பட்டியலை நேற்று வெளியிட்டது.
அதில் இரண்டு கட்சிகளும் வரும் மக்களவை தேர்தலில் 20 தொகுதிகளும், இடைத்தேர்தல் நடைபெறும் 18 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றனர். அனைத்து தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை திமுக மற்றும்அதிமுக வெளியிட்டது. அதில் மிகவும் சுவாரசியமான விசியம் என்னவென்றால், ஒரே குடும்பத்தை சேர்ந்த அண்ணன்-தம்பி இருவரையும் ஒரே தொகுதியில் திமுக-அதிமுக களமிறக்கி உள்ளது.
ஆம், இடைத்தேர்தல் நடைபெறும் ஆண்டிப்பட்டி தொகுதியில் அதிமுக தலைமை லோகிராஜனுக்கு சீட் ஒதுக்கி உள்ளது. அதே தொகுதியில் திமுக சார்பில் மகாராஜனுக்கு சீட் வழங்கி உள்ளது.
அதிமுக சார்பில் களம் காணும் லோகிராஜன் மற்றும் திமுக சார்பில் களம் காணும் மகாராஜன் இருவரும் அண்ணன்-தம்பி ஆவார்கள். ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் களமிறங்கி உள்ளதால், ஆண்டிப்பட்டி தொகுதி மிகவும் பிரபலமாகி உள்ளது. இந்த தொகுதி குறித்து தான் தற்போது சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது.