Bus Pass Validity: 1000 ரூபாய் பாஸ் ஜூலை 15 வரை செல்லும்

மே மாதம் வாங்கிய 1000 ரூபாய் மாதாந்திர பாஸ் ஜூலை 15 வரை செல்லும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். 

Written by - ZEE Bureau | Last Updated : Jun 21, 2021, 10:11 AM IST
Bus Pass Validity: 1000 ரூபாய் பாஸ் ஜூலை 15 வரை செல்லும்

கொரோனா தொற்றின் இரண்டாவது அலை (Corona Second Wave) மெல்ல மெல்ல குறைந்துகொண்டு வருகிறது. மிக அதிகமாக இருந்த ஒரு நாள் தொற்றின் அளவு தமிழகத்தில் (Tamil Nadu) தற்போது படிப்படியாக வீழ்ச்சியடையத் தொடங்கி உள்ளது.

தமிழகத்தில் (Tamil Nadu) கடந்த மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு (Lockdown) வருகிற 21 ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து ஊரடங்கு நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதன்படி தமிழகத்தில் மேலும் சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூன் 28 ஆம் தேதி வரை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

ALSO READ |Lockdown Update: சென்னை உள்பட 4 மாவட்டங்களில் அரசு பஸ் சேவை தொடக்கம்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்துவரும் நிலையில், ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கிட்டத்தட்ட ஒருமாதத்திற்கு பிறகு சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மட்டும் பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படுகின்றன. இதுகுறித்து போக்குவரத்து துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்.,

சென்னையில் அரசு பஸ்கள் இரவு 9.30 மணிவரை இயக்கப்படும் என்று கூறினார். மேலும், மே 16 2021 முதல் ஜூலை 15 2021 வரை பயணம் செய்யும் வகையில் 1000 ரூபாய் பாஸ் வாங்கியவர்கள் ஜூலை 15ஆம் தேதி வரை பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும் பெண்கள், மாற்றுத் திறனாளிகள், திருநங்கைகளுக்கு என மூன்று வகை வண்ணங்களில் இலவச பஸ் டிக்கெட் விநியோகம் செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ALSO READ | TN Assembly: சட்டப்பேரவை நிகழ்வுகள் இனி நேரலையில் ஒளிபரப்பாகுமா? அரசு பரிசீலனை

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News