Tamil Nadu CM Stalin Arrives in Delhi: தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (ஏப்ரல் 27, வியாழக்கிழமை) இரவு டெல்லி செல்ல திட்டமிட்டு இருந்த நிலையில், விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தனது டெல்லி பயணத்தை ரத்து செய்தார். இந்நிலையில், இன்று (ஏப்ரல் 28, வெள்ளிக்கிழமை) காலை டெல்லி புறப்பட்டு சென்றார். இன்று காலை டெல்லி சென்றடைந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு டெல்லி விமான நிலையத்தில் திமுக மூத்த தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற திமுக எம்.பிக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அதன்பிறகு நேராக தமிழ்நாடு அரசு இல்லத்திற்கு சென்ற முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி பாதுகாப்பு படையினரின் மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
குடியரசுத் தலைவரை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்:
இன்று காலை 11.30 மணி அளவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்து, கிண்டி கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு மருத்துவமனை திறப்பு விழாவிற்கு அழைப்பிதழை வழங்கினார். மேலும் நீட் உட்பட சட்டப்பேரவைகளில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு விரைந்து ஆளுநர் ஒப்புதல் கால நிர்ணயம் செய்வது தொடர்பாகவும் குடியரசுத் தலைவரிடம் தமிழ்நாடு முதலமைச்சர் வலியுறுத்தியதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
மேலும் படிக்க - CM Stalin: டெல்லி செல்லாமல் வீடு திரும்பிய முதல்வர் ஸ்டாலின்... காரணம் என்ன?
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்லக் காரணம் என்ன?
சென்னை கிண்டி பன்னோக்கு அரசு மருத்துவமனை கட்டுமான பணிகள் நிறைவடைந்து திறப்பு விழாவுக்கு தயாராகி வருகிறது. மறைந்த முன்னாள் முதலமைச்சரும், முன்னாள் திமுக தலைவருமான கலைஞர் நினைவாக, அவர் பிறந்த திருவாரூர் மாவட்டத்திலும் கலைஞர் தோட்டம் அமைக்கப்பட்டு உள்ளது. இவற்றை திறந்து வைக்க குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு அழைப்பு விடுப்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி புறப்பட்டு சென்றார்.
உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த எடப்பாடி கே.பழனிசாமி:
முன்னதாக ஏப்ரல் 27 ஆம் தேதி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் (அதிமுக) பிரதிநிதிகள் மற்றும் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோரை டெல்லியில் உள்ள உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜேபி நட்டா முன்னிலையில் இந்த கூட்டம் நடைபெற்றது.
தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் அதிமுக பிரதிநிதிகள் சென்றனர். இந்த கூட்டத்தில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலையும் கலந்து கொண்டார்.
மேலும் படிக்க - ஓடி ஒளிந்து கொள்பவர்தான் எடப்பாடி பழனிசாமி - அமைச்சர் மனோதங்கராஜ்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ