ஓ.பி.எஸ்.தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் முதன் முதலாக இன்று காலை தமிழக அமைச்சரவை கூட்டம் சென்னையில் தொடங்கியது. முன்னதாக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், ஜெயலலிதா அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அஞ்சலி செலுத்தினர். 

Last Updated : Dec 10, 2016, 01:28 PM IST
ஓ.பி.எஸ்.தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது  title=

சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் முதன் முதலாக இன்று காலை தமிழக அமைச்சரவை கூட்டம் சென்னையில் தொடங்கியது. முன்னதாக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், ஜெயலலிதா அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அஞ்சலி செலுத்தினர். 

உடல் நலக்குறைவு காரணமாக கடந்த செப்டம்பர் 22-ம் தேதி முதல் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, தீடிர் மாரடைப்பு ஏற்பட்டு டிசம்பர் 5-ம் தேதி இரவு 11:30 மணிக்கு காலமானார்.

இதனையடுத்து ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக பதவியேற்றார். அவருடன் 31 புதிய அமைச்சர்களும் பதவியேற்றார்கள். 

முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது. ஜெயலலிதா மறைந்த பிறகு நடைபெறும் முதல் அமைச்சரவை கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.இந்த கூட்டத்தில் ஜெயலலிதா நினைவிடம், ஜல்லிக்கட்டு, காவிரி விவகாரம்  ஆகிய முக்கிய பிரச்சினைகள் குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது.

Trending News