சென்னை: கொரோனா தொற்றின் இரண்டாவது அலை நாடு முழுவதும் தீவிரமாக பரவிக்கொண்டு இருக்கிறது. பல்வேறு மாநிலங்களில் ஒற்றை நாள் தொற்றின் அளவு புதிய உச்சங்களைத் தொட்டுக்கொண்டு இருக்கிறது.
தமிழகத்திலும் ஒரு நாள் தொற்றின் (Coronavirus) எண்ணிக்கை உயர்ந்துகொண்டே வருகிறது. தொற்று அதிகரித்துக்கொண்டு இருப்பதால், பலவித அடிப்படை மருத்துவ வசதிகளுக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆக்சிஜன், படுக்கைகள், தடுப்பூசிகள், மருந்துகள் என அனைத்து வித பொருட்கள் மற்றும் சேவைகளின் தேவைகளும் அதிகரித்து வருகின்றன.
அவசர தேவைக்கு ஆபத்பாந்தவனாக இருக்கும் ஆம்புலன்ஸ் வாகனங்களின் தேவையும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு இருக்கிறது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு சிலர் மக்களிடம் பணம் பறிப்பதிலும் ஈடுபட்டுள்ளனர்.
தனியார் ஆம்புலன்சில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக பல குற்றச்சாட்டுகள் வந்துள்ளன. இந்த நிலையில் நோயாளிகளை அழைத்துச் செல்லும் தனியார் ஆம்புலன்சுக்கு கட்டணங்களை நிர்ணயித்தது தமிழக அரசு. தனியார் ஆம்புலன்ஸ் கட்டணங்கள் தொடர்பாக தமிழக அரசு இன்று சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
ALSO READ: சென்னை மண்டலங்களுக்கு தலா 3 கோவிட் சிறப்பு வாகனங்கள்: சென்னை மாநகராட்சி ஆணையர்
தமிழக அரசு (TN Government) சார்பில் சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிவிப்புகளின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:
- நோயாளிகளை அழைத்துச் செல்லும் சாதாரண ஆம்புலன்சுகளின் முதல் 10 கி.மீ-ருக்கான கட்டணம் 1500 ரூபாயாக இருக்கும்.
- கூடுதலாகும் ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் 25 ரூபாய் வசூலிக்கலாம்.
- ஆக்சிஜன் (Oxygen) வசதியுடன் கூடிய ஆம்புலன்சுக்கு முதல் 10 கி.மீ-ருக்கான கட்டணம் 2000 ரூபாயாக இருக்கும்.
- கூடுதலாகும் ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் 25 ரூபாய் வசூலிக்கலாம்.
- வெண்டிலேட்டர் வசதியுடன் கூடிய ஆம்புலன்சுகளின் முதல் 10 கி.மீ-ருக்கான கட்டணம் 4000 ரூபாயாக இருக்கும்.
- கூடுதலாகும் ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் 100 ரூபாய் வசூலிக்கலாம்.
உடல்நலக் குறைபாடு ஏற்பட்டால் மக்கள் 108 எண்ணுக்கு போன் செய்கிறார்கள். சில சமயம் அவசரம் கருதி தனியார் ஆம்புலன்சுகளின் சேவையையும் நோயாளிகள் நாடுகிறார்கள். அத்தகைய நேரங்களில் தனியார் ஆம்புலன்சுகள் மிக அதிக கட்டணங்களை வசூலிப்பதாக பல தரப்புகளிலிருந்து புகார்கள் பல வந்தன. இதைத் தொடர்ந்து இந்த முறைகேடுகளை சரிசெய்ய, தனியார் ஆம்புலன்சுகளுக்கான கட்டணங்களை நிர்ணயித்துள்ளது தமிழக அரசு.
ALSO READ: கொரோனா நிவாரணப் பணிகளுக்காக திருமாவளவன் நிதி உதவி
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR