சாணி பவுடருக்கு தடை விதிக்கப்படும்: தமிழக அரசு

சாணி பவுடருக்கு தடை விதிக்கப்படும்: தமிழக அரசு

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 17, 2021, 11:34 PM IST
சாணி பவுடருக்கு தடை விதிக்கப்படும்: தமிழக அரசு title=

காலம் மாற மாற பல நல்ல விஷயங்கள் ஆபத்தின் அடிப்படையாக மாறி விடுகின்றன. மனித வாழ்வின் நல்லதற்காக உருவாக்கப்பட்ட பல, தீமைக்கு வழிவகுக்கின்றன. 

அப்படிப்பட்ட விஷயங்களில் சாணியும் ஒன்றாகும். சாணி என்பது விஷ கிருமிகளை போக்கும் ஒரு விஷயமாக இருந்து வந்தது. ஆனால், இப்போது அதுவே விஷமாக மாறியுள்ளது. வீட்டிற்கு முன் சாணி பூசி சுகாதாரம் பேணிய காலம் மாறி, தற்போது இதில் வணிகமயமாக்கல்தான் பெரிதாக உள்ளது. சாணி பவுடர் என்பது ஒரு ஷயமாக மாறிவிட்டது.

சாணி பவுடரில் பல அபாயகரமான ரசாயனப் பொருட்கள் உள்ளன.  இது எளிதாக கிடைப்பதால், இதை கலந்து குடித்து தற்கொலை (Suicide) செய்பவர்களின் எண்னிக்கையும் அதிகரித்துள்ளது.

இதற்கிடையில், சாணி பவுடருக்கு தடை விதிக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையில் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் (Ma Subramsnian), சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ALSO READ: தற்கொலை வேண்டாம்! உங்கள் சகோதரனாக கேட்கிறேன்: முதலமைச்சர் உருக்கமான கடிதம்

இந்த நிகழ்வில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “உலக தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு முகாம் என்பதால் அதுகுறித்து பேச வேண்டும். தமிழ்நாட்டில் தற்கொலைகளினால் ஆண்டு ஒன்றுக்கு 15முதல்16 ஆயிரம் வரையிலான மரணங்கள் ஏற்படுகின்றன. விபத்துக்களினால் 11முதல்12 ஆயிரம் வரை மரணங்கள் ஏற்படுகின்றன. தற்கொலை மரணங்கள்தான் அதிகளவில் உள்ளது. அதில் 10-15 சதவிகிதத்தினர் தூக்குப் போட்டு தற்கொலை செய்துக் கொள்கின்றனர். மற்றவர்கள் எல்லாம் சாணி பவுடர், பால் டாயில், எலி மருந்து ஆகியவற்றை சாப்பிட்டு தற்கொலை செய்து கொள்கின்றனர்” என்றார்.

வணிக ரீதியான சாணி பவுடர் தயாரிப்பால், சாணிபவுடர் விஷமாக மாறியுள்ளது. ஆகையால், சாணி பவுடர் தயாரிக்கும் நிறுவனங்கள் மீது, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் (MK Stalin) மூலம் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் மீண்டும் குறிப்பிட்டார்.

மேலும், தற்கொலைக்கு பெரிய காரணங்களாக இருக்கும் பால் டாயில், எலி மருந்து போன்றவற்றை கடைகளில் விற்பவர்கள் அதை பாதுகாப்பான இடத்தில் வைத்திருக்க வேண்டும் என்றும் வெளிப்படையாகத்தான் வியாபாரம் செய்ய வேண்டும் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தினார்.

ALSO READ: NEET Suicide: நீட் பயத்தால் மற்றுமொரு தற்கொலையா? உண்மை என்ன?  

ALSO READ: Ola Electric ஸ்கூட்டர் S1 விற்பனை இன்று முதல் துவக்கம்; முழு விவரம் இங்கே

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News