கேரளா எல்லை பகுதியில், தமிழகத்தின் கனரக வாகனங்களுக்கு தடை!

கேரளா-விற்குள் சரக்கு ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்களுக்கு நெல்லை மாவட்டம் கோட்டைவாசல் ஆரியங்காவு வனப்பகுதியில் தடை விதித்துள்ளது!

Last Updated : Aug 2, 2018, 09:51 AM IST
கேரளா எல்லை பகுதியில், தமிழகத்தின் கனரக வாகனங்களுக்கு தடை! title=

கேரளா-விற்குள் சரக்கு ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்களுக்கு நெல்லை மாவட்டம் கோட்டைவாசல் ஆரியங்காவு வனப்பகுதியில் தடை விதித்துள்ளது!

தென்மேற்கு பருவமழை காரணமாக, மலைசாலைகள் மிகவும் மோசமான நிலையில் இருப்பதால் இந்த மலைப்பாதைகளில் கனரக வாகனங்களை அனுமதிக்க இயலாது என காரணம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிகவும் கடினமான வளைவுகள் மற்றும் அதல பாதாளம் மிக்க மலைப்பாதை ஆயிரக்கணக்கில் கனரக வாகனங்கள் செல்வதால் இந்த தடத்தில் அடிக்கடி சாலைகள் பழுது அடைகின்றன. மேலும் தற்போது தென்மேற்குப் பருவ மழை பெய்து வருவதால் கல்லடா ஆற்றில் மண்சரிவு உருவாகியுள்ளது.

இதனால் இநத் சாலையில், பாதுகாப்பு நலன் கருதி கனரக வாகனங்கள் செல்ல தடைவிதித்துள்ளதாக கொல்லம் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

இதனையடுத்து தமிழகத்தில் இருந்து கேரளா மாநிலத்திற்குள் செல்லும் வாகனங்கள் புளியகரை காவல்துறையினராலும், சோதனைச்சாவடியிலும் திருப்பி அனுப்பி வைக்கப்படுகின்றன. திடீரென அறிவிக்கப்பட்ட இந்த தடையால் வாகன ஓட்டுனர்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.

Trending News