சென்னை : அரசியல் பழிவாங்கும் நோக்கத்திற்காக உபா(UPPA) சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேராசிரியர் ஆனந்த் டெல்டும்டே உட்பட அனைவரையும் விடுதலை செய்யக் கோரி தமிழகம் முழுவதும் செப்டம்பர் 15 ஆம் தேதி மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முண்ணனி பேரணி அறிவித்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு (Tamil Nadu) தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பொதுச் செயலாளர் கே.சாமுவேல் ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
"பீமா கொரேகான் எழுச்சியை சகித்துக்கொள்ள முடியாத ஒன்றிய பா.ஜ.க (BJP) அரசினால் சட்டவரோத நடவடிக்கைகள் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறைப்படுத்தப்பட்ட அருட்தந்தை ஸ்டார சுவாமி சிறையிலேயே மரணமடைந்தார். உபா சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள பேராசிரியர் ஆனந்த் டெல்டும்டே, ஜோதி ரகோபா ஜக்தாப், சாகர் டாட்யா ராம் கோர்கே, ரமேஷ் முரளிதர் கெய்சோர், சுதிர் தாவ்லே, சுரேந்திர கேட்லிங், மகேஷ் ராவுத், ஷோமா சென், ரோனா வில்சன், அருண் பெரைரா , சுதா பரத்வாஜ் , வரவரராவ் , வெரோன் கன்சால்வ்ஸ் ,கவுதம் நவ்லாகா ,ஹனி பாபு ஆகிய 15 பேரும் இப்பொழுதும் நிச்சயமற்ற எதிர்காலத்தை நோக்கி சிறையில் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரையும் விடுவிக்க வேண்டும்.
ALSO READ: PMK: தமிழகத்தில் கீழடி அகழ்வாராய்ச்சியின் ஏழாவது கட்டத்தை நீட்டிக்கவும்
இதேபோல் நாடு முழுவதும் அரசியல் பழிவாங்கும் நோக்கத்துடன் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் அனைவரையும் விடுதலை செய்திட வேண்டும் என்ற முழக்கத்துடன், தீண்டாமை ஒழிப்பு முன்னணியால் ஒருங்கிணைக்கப்பட்டுள்ள "பீமா கொரேகான் சதி வழக்கில் சிறைப்படுத்தப்பட்டார் விடுதலை இயக்கம்" சார்பில் செப்டம்பர் 15, சர்வதேச ஜனநாயக தினத்தன்று தமிழ்நாடு முழுவதும் மாபெரும் மனிதச் சங்கிலி போராட்டத்தை நடத்தவுள்ளது. மேலும் ஆதரவு திரட்டி மக்கள் மத்தியில் பிராச்சாரங்களையும் நடத்தவுள்ளது.
"ஜனநாயகத்தை முடக்கும் உபா போன்ற சட்டங்களை திரும்ப பெற வேண்டும். பழிவாங்கும் நோக்கத்துடன் புனையப்பட்ட பொய் வழக்கை திரும்பப் பெற வேண்டும். சிறைப்படுத்த பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். என்ற இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிய, அம்பேத்கரிய, பெரியாரிய, மனித உரிமை, பெண்ணுரிமை ஆகிய தளங்களில் பணியாற்றும் ஐம்பதிற்க்கும் மேற்பட்ட ஜனநாயக இயக்கங்கள் ஒருங்கிணைந்து நடத்துகிற இந்த மனிதச்சங்கிலி போராட்டத்தில் தமிழ்நாடு மக்கள் அனைவரும் கை கொடுத்திட வேண்டும். அரசியல் கட்சிகளும், இயக்கங்களும் தங்களது ஆதரவினை வழங்கிட வேண்டுமென்று கூட்டியக்கத்தின் தலைவர்கள் அறைகூவல் விடுத்துள்ளனர்.!!”
ALSO READ: Tamil Nadu Waqf Board: வக்ஃப் வாரியச் சொத்துக்களை மீட்கும் நடவடிக்கை மும்முரமாகிறது
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR