தமிழக தலைமை செயலாளர் ராமமோகன ராவ் வீட்டில் நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதில் பல கோடி பணம் , ஆவணங்கள் மற்றும் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதனைதொடர்ந்து இன்று ஐஏஎஸ் அதிகாரி நாகராஜன் சோதனை நடத்தப்படுகிறது. பல்லாவரத்தில் உள்ள அவரது வீட்டில் இருந்து சுமார் ரூ.2 கோடி பணம் மற்றும் 10 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக அரசு சேமிப்பு கிடங்கின் நிறுவன மேலாண் இயக்குனர் நாகராஜன் வருமானத்திற்கு அதிகமாக சுமார் ரூ.2 கோடி வரை சொத்து வைத்துள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் கண்டுப்பிடித்துள்ளனர். மேலும் சேகர் ரெட்டி விவகாரத்திற்கும், நாகராஜன் வீடு சோதனைக்கும் தொடர்பில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.