Tamil Nadu Lok Sabha Election: எந்த எந்த தொகுதியில் யார் யார் முன்னிலை? முழு விவரம்!

Tamil Nadu Lok Sabha Election Result 2024 live: தமிழகத்தில் இன்று காலை முதல் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன.  

Written by - RK Spark | Last Updated : Jun 4, 2024, 09:05 AM IST
  • பல இடங்களில் திமுக முன்னிலை.
  • திருநெல்வேலி நயினார் நாகேந்திரன் முன்னிலை.
  • கோவையில் திமுக முன்னிலையில் உள்ளது.
Tamil Nadu Lok Sabha Election: எந்த எந்த தொகுதியில் யார் யார் முன்னிலை? முழு விவரம்! title=

Tamil Nadu Lok Sabha Election Result 2024 live: இந்தியா முழுவதும் மக்களவை தேர்தலுக்கான வாக்கு பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. இன்று ஜூன் 4ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகிறது. அதன்படி, தமிழகத்தில் காலை முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த முறை திமுக மற்றும் அதிமுகவை தாண்டி பாஜகவும் கடும் போட்டி போட்டு வருகிறது. வழக்கம் போல் இல்லாமல் இந்த முறை தனித்து களம் கண்டுள்ளது பாஜக. இதன் மூலம் தங்களது வாக்கு சதவீதத்தை நிரூபிக்க உள்ளன. மேலும் ஒரு சில இடங்களில் திமுகவிற்கு நேரடி சவாலாக உள்ளது. எப்படியாவது திமுகவை வீழ்த்த வேண்டும் என்ற உறுதியுடன் உள்ளது.

மேலும் படிக்க | Tamil Nadu Lok Sabha Election Result: சோகத்தின் உச்சத்தில் அதிமுக! வெறும் இத்தனை இடங்கள் தான் கிடைக்குமா?

 

யார் யார் முன்னிலை?

முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, திமுக முன்னிலை வகித்து வருகிறது. சென்னையில் உள்ள மூன்று தொகுதிகளாக வட சென்னை, தென் சென்னை மற்றும் மத்திய சென்னை ஆகிய இடங்களில் திமுக முன்னிலை பெற்று வருகிறது. மேலும் காஞ்சிபுரம், நீலகிரி, கோவை ஆகிய இடங்களில் திமுக முன்னிலை வகித்து வருகிறது. திமுக கூட்டணி கட்சிகளும் பல இடங்களில் முன்னிலையில் உள்ளது. மதுரை கம்யூனிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசன், சிதம்பரம் விசிக வேட்பாளர் திருமாவளவன், சிவகங்கை காங்கிரஸ் வேட்பாளர் கார்த்திக் சிதம்பரம், விழுப்புரம் விசிக வேட்பாளர் ரவிக்குமார், திருச்சி மதிமுக வேட்பாளர் துரை வைகோ, கரூர் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி ஆகியோர் முன்னிலையில் உள்ளனர்.

திருநெல்வேலியில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் முன்னிலையில் உள்ளார். பெரிதும் எதிர்பார்த்த அண்ணாமலை, தமிழசை சவுந்தரராஜன், வினோஜ் ஆகியோர் இன்னும் முன்னிலையில் வரவில்லை. மேலும் மதுரையில் ஒரு சில இடங்களில் குறிப்பாக மதுரை வடக்கு மற்றும் மத்தியம் சட்டமன்ற தொகுதிகளில் அதிமுக முன்னிலை வகிப்பதாக கூறப்படுகிறது. அதே சமயம் மதுரை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட மேலூர், மதுரை கிழக்கு, மதுரை தெற்கு, மதுரை தெற்கு ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் சிபிஎம் வேட்பாளர் சு.வெங்கடேசன் முன்னிலை வைப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் படிக்க | South Chennai Tamil Nadu Lok Sabha Election Result 2024: தென் சென்னை தொகுதி முண்ணனி விவரம்.. தமிழிசை? தமிழச்சி?

 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News