சட்டசபைக்குள் செல்போன்: மீண்டும் சர்ச்சையில் சிக்கிய மன்னார்குடி எம்.எல்.ஏ டி.ஆர்.பி. ராஜா

சட்டசபை உறுப்பினர்கள் யாரும் சட்டசபைக்கு உள்ளே செல்போன் பயன்படுத்தக்கூடாது என்றிப்பதால், சபைக்கு வெளியே உள்ள லாக்கரில் அனைவரும் செல்போனை வைத்துவிட்டுச் செல்ல ஒரு வழிவகை செய்யப்பட்டுள்ளது. அவ்வாறே அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 11, 2021, 06:50 PM IST
  • சட்டப்பேரவைக்குள் செல்போன் பயன்படுத்தக்கூடாது என்ற விதி உள்ளது.
  • மன்னார்குடி திமுக சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி ராஜா அவைக்குள் செல் போனை பயன்படுத்தியுள்ளார்.
  • இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சட்டசபைக்குள் செல்போன்: மீண்டும் சர்ச்சையில் சிக்கிய மன்னார்குடி எம்.எல்.ஏ டி.ஆர்.பி. ராஜா title=

சென்னை: தமிழக சட்டப்பேரவைக்குள் செல்போன் பயன்படுத்தக்கூடாது என்ற விதி உள்ளது. இந்த விதியை மீறி, மன்னார்குடி திமுக சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி ராஜா அவைக்குள் செல் போனை பயன்படுத்தியுள்ளார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சட்டசபை உறுப்பினர்கள் யாரும் சட்டசபைக்கு உள்ளே செல்போன் பயன்படுத்தக்கூடாது என்றிப்பதால், சபைக்கு வெளியே உள்ள லாக்கரில் அனைவரும் செல்போனை வைத்துவிட்டுச் செல்ல ஒரு வழிவகை செய்யப்பட்டுள்ளது. அவ்வாறே அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு நிகழ்வின்போது, மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி ராஜா, விதிமுறைகளை மீறி சட்டப்பேரவைக்குள் செல்போனில் பேசி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இவர் எவ்வாறு சட்டமன்றத்துக்குள் செல் போனை எடுத்துச் சென்றார் என்றும், ஏன் லாக்கரில் அதை வைக்கவில்லை என்றும் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ALSO READ:

முன்னதாக, 2011ஆம் ஆண்டு, சட்டமன்ற நிகழ்வின்போது இதே போன்ற ஒரு சம்பவம் நடந்தது. அதிலும் டி.ஆர்.பி.ராஜாதான் ஈடுபட்டிருந்தார். அப்போது செல்போனில் வீடியோ எடுத்ததால், டி.ஆர்.பி.ராஜாவின் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்த விசாரணையும் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றவுடன் பல அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதை நாம் கண்டு வருகிறோம். மக்கள் அளித்த பொறுப்பை உணர்ந்து அனைத்து அமைச்சர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் தங்கள் பணிகளில் தீவிரமாக செயல்பட வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாகத் தகவல். ஆகையால், சட்டமன்ற உறிப்பினர்களின் இப்படிப்பட்ட பொறுப்பற்ற செயல்களுக்கும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, தேவையான அறிவுறுத்தல்கள் அந்தந்த உறுப்பினர்களுக்கு அளிக்கபடும் என்பதில் சந்தேகமில்லை.

முன்னதாக, புதிதாக பதவி ஏற்ற அனைத்து அமைச்சர்களும் மக்கள் பணிகளில் நியாயமாகவும் நேர்மையாகவும் நடந்துகொள்ள வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். அமைச்சர்கள் தவறு செய்தால், அவர்கள் உடனடியாக பதவி நீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.  

அமைச்சர்கள் தங்கள் துறைகளின் பணி நியமனங்கள், அமைச்சர்களின் பி.ஏ-க்களின் நியமனங்கள் ஆகியவற்றில் வெளிப்படைத்தன்மையை கடைபிடிக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

ALSO READ:

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News