CCTV அவசியம் குறித்து குறும்படம் வெளியிட்ட TN காவல்துறை!

வீடுகளில் CCTV பொருத்துவதன் அவசியம் குறித்தும், போக்குவரத்து அபராதம் செலுத்தும் முறையில் இ-சலான் முறை குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்து தமிழ்நாடு காவல்துறை குறும்படங்களை வெளியிட்டுள்ளது!

Last Updated : Aug 6, 2018, 11:58 AM IST
CCTV அவசியம் குறித்து குறும்படம் வெளியிட்ட TN காவல்துறை! title=

வீடுகளில் CCTV பொருத்துவதன் அவசியம் குறித்தும், போக்குவரத்து அபராதம் செலுத்தும் முறையில் இ-சலான் முறை குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்து தமிழ்நாடு காவல்துறை குறும்படங்களை வெளியிட்டுள்ளது!

இதுகுறித்து தமிழ்நாடு காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளதாவது...

"சென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற பலவகையான குற்றங்கள் அசம்பாவிதங்கள் மற்றும் வாகன விபத்துக்கள் மற்றும் வன்முறை சம்பவங்களின்போது உண்மை தன்மையை அறிந்து கொள்வதற்கு சிசிடிவி கேமரா காட்சிகள் பெரிதும் உதவியுள்ளன.

மேலும் முக்கிய கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களிலும் செயின் பறிப்பு வழிப்பறி ஆகிய சம்பவங்களிலும் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்கு சிசிடிவி கேமராக்கள் முக்கிய பங்காற்றியுள்ளன. ஆகவே இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த சிசிடிவி கேமராக்களை சென்னை மாநகரம் முழுவதும் பொருத்த வேண்டும் எனவும் இது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு.அ.கா.விஸ்வநாதன் இ.கா.ப. அவர்கள் உத்தரவிட்டதின் பேரில் பொதுமக்கள் வியாபாரிகள் மற்றும் தனியார் நிறுவனத்தினரிடையே சிசிடிவி கேமரா பொருத்துவதன் அவசியம் குறித்து காவல்துறையினர் மூலம் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தப்பட்டும் வருகிறது. 

அதனடிப்படையில் 04.08.2018-ம் தேதியன்று சிசிடிவி பொருத்துவதன் அவசியம் குறித்து தயாரிக்கப்பட்ட மூன்றாவது கண் என்ற விழிப்புணர்வு குறும்படத்தின் குறுந்தகட்டை சென்னை பெருநகர காவல் ஆணையர் அவர்கள் வெளியிட நடிகர் திரு.விவேக் அவர்கள் பெற்றுக் கொண்டார். 

இதே போல சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகள் அபராதம் செலுத்தும் முறையான பணமில்லா அபராதம் செலுத்தும் முறை குறித்தும் இது தொடர்பாக வாகன ஓட்டிகளுக்கு வழங்கும் இ-சலான் குறித்தும் போக்குவரத்து காவல்துறை சார்பில் தயாரிக்கப்பட்ட விழிப்புணர்வு குறும்படத்தின் குறுந்தகட்டை சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு.அ.கா.விஸ்வநாதன் இ.கா.ப அவர்கள் வெளியிட பைக் ரேஸ் பெண் வீரர் அலிஷா அப்துல்லா அவர்கள் பெற்றுக் கொண்டார்." என குறிப்பிட்டுள்ளனர்.

Trending News