தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் உடல்நலக்குறைவால் மரணம்!!

தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் உடல்நலக்குறைவால் இன்று  காலமானார்!!

Last Updated : Apr 6, 2019, 10:12 AM IST
தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் உடல்நலக்குறைவால் மரணம்!!  title=

தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் உடல்நலக்குறைவால் இன்று  காலமானார்!!

91 வயதுடைய தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் உடல்நலக்குறைவால் காலமானார். இவர் நாமக்கல் மாவட்டம் சிவியாம்பாளையத்தில் பிறந்த அவர் 60 ஆண்டுகளாக சிலப்பதிகார ஆய்வுகளில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார். இது தொடர்பாக 25 நூல்களையும் அவர் எழுதி பதிப்பித்துள்ளார்.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆய்வு அணிந்துரைகளை எழுதியுள்ள சிலம்பொலி செல்லப்பன், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இலக்கிய சொற்பொழிவுகள் ஆற்றியுள்ளார். தமிழக அரசின் கலைமாமணி பட்டம், தமிழக அரசின் பாவேந்தர் விருது, முத்தமிழறிஞர் கலைஞர் விருது, மலேசியத் தமிழ்ச்சங்க விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்ற அவர், தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் பதிப்புத்துறை இயக்குனராகவும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனராகவும் பணிபுரிந்துள்ளார்.

வயது முதிர்வு மற்றும் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த சிலம்பொலி செல்லப்பன் இன்று காலை காலமானார்.

 

Trending News