பொன். மாணிக்கவேல் நியமனத்திற்கு எதிராக tnGovt மேல்முறையீடு!

சிலை கடத்தல் வழக்கு விசாரணையில் சிறப்பு அதிகாரியாக பொன். மாணிக்கவேல் நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு மேல்முறையீடு செய்ய முடிவு!

Last Updated : Dec 4, 2018, 07:53 PM IST
பொன். மாணிக்கவேல் நியமனத்திற்கு எதிராக tnGovt மேல்முறையீடு! title=

சென்னை: சிலை கடத்தல் வழக்கு விசாரணையில் சிறப்பு அதிகாரியாக பொன். மாணிக்கவேல் நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு மேல்முறையீடு செய்ய முடிவு!

சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க IG பொன் மாணிக்கவேல் தலைமையில் சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவை அமைக்கப்பட்டு கடந்த ஆண்டு ஜூலை மாதம் சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. வழக்கு விசாரணையில், சிலை கடத்தல் விவகாரத்தில் சர்வதேச தொடர்புகள் குறித்து வெளியானதால் சிலைக்கடத்தல் தொடர்பான வழக்குகள் CBI-க்கு மாற்றப்படுவதாக தமிழக அரசு உத்தரவிட்டது.

இதை எதிர்த்து வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் சிலை கடத்தல் வழக்குகளை CBI-க்கு மாற்றி தமிழக அரசு பிறப்பித்த உத்தரவிற்கு தடை விதித்தது.

இதைத்தொடர்ந்து தமிழக அரசின் பதிலும் தாக்கல் செய்யப்பட்டு உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.  இந்நிலையில், கடந்த நவம்பர் 30-ஆம் நாள் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு IG பொன் மாணிக்கவேல் ஓய்வு பெற இருந்த நிலையில், CBI-க்கு வழக்குகளை மாற்றும் தமிழக அரசின் அரசாணையை சட்டவிரோதம் என தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றம் ரத்துசெய்தது. மேலும் ஓய்வுபெறும் பொன். மாணிக்கவேல அவர்களை ஒரு வருடத்திற்கு சிறப்பு அதிகாரியாக நியமித்தும் உத்தரவிட்டது.

சிலை கடத்தல் வழக்கு விசாரணையில் சிறப்பு அதிகாரியாக பொன். மாணிக்கவேல் நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடிவு செய்துள்ளது.

Trending News