தமிழகத்தின் கொரோனா பரவலை கட்டுப்படுத்த, தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. முன்னாதாக, மேம் 10ம் தேதி முதல், மே மாதம் 24ம் தேதி வரை, தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, சுகாதாரத் துறை உள்ளிட்ட சம்பந்தப்பட்ட பிற துறைகள் இணைந்து 'வார் ரூம்' (War Room) எனப்படும் ஒருங்கிணைந்த கட்டளை மையம் (UCC) ஒன்றை அமைத்துள்ளன.
இந்த மையம் சுகாதாரத் துறையுடனும் சென்னை மாநகராட்சியுடனும் ஒருங்கிணைந்து, சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளைக் கண்காணிக்கும்.
தேவைப்படும் இடங்களில் நோயாளிகளுக்கான படுக்கை வசதிகளை அதிகரிப்பது, சிகிச்சை அளிக்க ஆக்ஸிஜன் தடையில்லாமல் கிடைப்பதை உறுதி செய்வது போன்றவற்றை மேற்கொண்டு நோயாளிகளுக்கு இந்த வார் ரூம் எனப்படும் இந்த மையம் உதவிடும்.
ALSO READ | கொரோனா நிவாரண நிதி திட்டத்தை மே10ம் தேதி தொடக்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்
கொரோனா பரவலைக் (Corona VIrus) கட்டுப்படுத்த அமைக்கப்பட்டுள்ள வார் ரூமின் ஒருங்கிணைப்பு அதிகாரியாக, தாரேஸ் அகமது என்னும் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளர் இறையன்பு இன்று (மே 09) வெளியிட்டார்.
மேலும், ஆக்சிஜன் தேவை கண்காணிப்பு பணிக்காக நந்தகுமார் ஐஏஎஸ், தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் படுக்கை வசதிகளை கண்காணிக்க எஸ்.உமா ஐஏஎஸ், சென்னையில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைகளில் கள ஆய்வு பணிக்கு எஸ்.வினீத் ஐஏஎஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக, நேற்று கொரோனா பரவல அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டின் முக்கிய கோரிக்கையாக, மாநிலத்திற்கான ஆக்சிஜன் ஒதுக்கீட்டை 500 மெட்ரிக் டன் என்ற அளவில் உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.
அதனை உடனடியாகப் பரிசீலிப்பதாக பிரதமர் மோடியும் உறுதியளித்திருந்த நிலையில், தமிழகத்திற்கான ஆக்ஸிஜன் ஒதுக்கீட்டை 419 மெட்ரிக் டன்னாக உயர்த்தி, உடனடியாக மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய மக்கள் நல வாழ்வு மற்றும் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழகத்துக்கு 419 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் வழங்கப்படும் என்றும், அது எந்தெந்த வகையில் வழங்கப்படும் என்பது குறித்தும் விவரமாக விளக்கி எழுதப்பட்டுள்ளது.
ALSO READ | தமிழகத்திற்கான ஆக்ஸிஜன் ஒதுக்கீட்டை 419 MT ஆக அதிகரித்தது மத்திய அரசு