கொரோனா நிவாரண நிதி திட்டத்தை மே10ம் தேதி தொடக்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்

கொரோனா நிவாரண நிதியாக 2.07 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு ₹4,000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், அதன் முதல் தவணை தொகையாக ₹2000 வழங்கும் திட்டத்தை மேம் மாதம் 10ம் தேதி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைக்கிறார். 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : May 8, 2021, 03:04 PM IST
  • தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி கட்சி அமோக வெற்றி பெற்றது.
  • இந்த தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்றது.
  • கொரோனா நிவாரண நிதியாக 2.07 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு ₹4,000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
கொரோனா நிவாரண நிதி திட்டத்தை மே10ம் தேதி தொடக்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின் title=

தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி கட்சி அமோக வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்றது.  அதைத் தொடர்ந்து தமிழக முதல் அமைச்சராக திமுக (DMK) தலைவர் மு.க.ஸ்டாலின் (MK Stalin) நேற்று பதவி ஏற்றார். 

பதவி ஏற்ற உடனேயே, பால் விலை குறைப்பு, பெண்களுக்கு இலவச பஸ் சேவை, கொரோனா நிவாரண நிதி உள்ளிட்ட ஐந்து முக்கிய திட்டங்களுக்கு அனுமதி வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டார். 

அதில், கொரோனா நிவாரண நிதியாக 2.07 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு ₹4,000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், அதன் முதல் தவணை தொகையாக ₹2000 வழங்கும் திட்டத்தை மேம் மாதம் 10ம் தேதி, அதாவது வரும் திங்கட்கிழமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைக்கிறார்.  இந்த தகவலை உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

இந்த திட்டத்தை செயல்படுத்த, வீடு வீடாக சென்று இதற்கான டோக்கன் வழங்கப்படும் என்றும், அதோடு, குடும்ப அட்டை வைத்திருப்பவர்கள் ரேஷன் கடைகளிலும் சென்று டோக்கன் வாங்கிக் கொள்ளலாம் எனக் கூறிய உணவுத் துறை அமைச்சர், ரேஷன் கடைகளில் தினமும் 200 பேருக்கு டோக்கன் வழங்கப்படும் என்றார்.

ALSO READ | தமிழக முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டுள்ள மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் வாழ்த்து

தமிழக அரசு நேற்று அறிவித்துள்ள மக்கள் நல திட்டங்கள்

1.ரேஷன் அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதி ரூ.4 ஆயிரம் முதல் தவணையாக ரூ. 2 ஆயிரம் இம்மாதமே வழங்கப்படும். 2.07 கோடி அரிசி அட்டைதாரர்கள் இதனால் பலன் பெறுவார்கள்.

2. நாளை முதல் அனைத்து மகளிருக்கும் சாதாரண கட்டண நகரப்பேருந்துகளில் கட்டணமின்றி இலவசமாக  பயணிக்கலாம்.

3. ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 குறைப்பு. மே 16 முதல் அமலுக்கு வருகிறது.

4. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகளின் கட்டணத்தை அரசே ஏற்கும் வகையில் காப்பீடு.

5.  “உங்கள் தொகுதியில் முதலமைச்சர்" என்ற புதிய துறை உருவாக்க உத்தரவு. இதில் 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' நிகழ்வில் பெறப்பட்ட மனுக்கள் அனைத்திற்கும் 100 நாட்களில் தீர்வு காண உத்தரவு.

ALSO READ | மே 11 சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும்
 

Trending News