தமிழ்நாடு அரசு மணல் இணையசேவை மூலம் விற்பனைசெய்ய சுமார் 52,000 டன் மணல் மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!
தமிழ்நாடு அரசு மணல் இணையசேவை மூலம் இறக்குமதி மணல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாடு மணல் இணைய சேவை தளம் (https://www.tnsand.in/) மற்றும் கைபேசி செயலி TNSAND மூலம் இறக்குமதி மணல் தேவைப்படுவோர் முன்பதிவு செய்து பெற்றுக்கொள்ளும் வசதியினை கடந்த செப்டம்பர் மாதம் தமிழக அரசு அறிமுகம் செய்தது.
இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் இந்த திட்டத்திற்கு முதற்கட்டமாக 56,750 டன் மனல் இறக்குமதி செய்யப்பட்டது., இறக்குமதி செய்யப்பட்ட மணலில் 95% மணல் விறப்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது இரண்டாம் கட்டமாக மலேசியாவில் இருந்து 52,000 டன் மணல் இறக்குமதி செய்யப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
இறக்குமதி செய்யப்படும் மணல் சென்னை எண்ணூர் துறைமுகத்தில் சேமித்து வைக்கப்பட்டு பொதுப்பணித்துறை உருவாக்கிய இணையதளம், TNSAND செயலி மூலமாகவும் முன்பதிவு செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டது.
இந்த மணல் வரும் நவம்பர் 20-ஆம் தேதி எண்ணூர் துறைமுகத்தை வந்தடையும் என்றும், அதன்பிறகு முன்பதிவு தொடங்கி, விற்பனை நடைபெறும் என்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.