1 முதல் 5ம் வகுப்பு வரை ஆண்டு பொதுத்தேர்வு ரத்தா? குளறுபடிக்கு பதிலளித்த பள்ளிக்கல்வித்துறை!

1 முதல் 5-ம் வகுப்பு வரை ஆண்டு பொதுத்தேர்வு நடைபெறாது என பரவிய தகவல் பொய் என பள்ளிக்கல்வித்துறை விளக்கமளித்துள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 3, 2022, 10:55 AM IST
  • 1 முதல் 5-ம் வகுப்பு வரை தேர்வு ரத்து என செய்தி வெளியானது
  • தேர்வு ரத்து என்ற செய்தி பொய் என விளக்கம்
  • பள்ளிக்கல்வித்துறை தொடர்ந்து குளறுபடி
1 முதல் 5ம் வகுப்பு வரை ஆண்டு பொதுத்தேர்வு ரத்தா? குளறுபடிக்கு பதிலளித்த பள்ளிக்கல்வித்துறை!  title=

தமிழகத்தில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை ஆண்டு பொதுத்தேர்வு நடைபெறாது என வெளியான செய்தி தவறானது என்றும் நிச்சயம் தேர்வு நடைபெறும் என்றும்  பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை ஆண்டு பொதுத்தேர்வு நடைபெறாது என வெளியான செய்தி தவறானது என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டிற்கான 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அட்டவணைகள் ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது. 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை இந்த ஆண்டுக்கான இறுதி தேர்வு நடைபெறாது என்று நேற்று செய்தி பரவியது. 

google

மேலும் படிக்க | இன்ஸ்டாகிராம் நண்பரிடம் ரூ.73 லட்சம் பறிகொடுத்த 67 வயது மூதாட்டி!

மேலும், 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புகளுக்கு வரை மட்டுமே ஆண்டுத்தேர்வு நடைபெறும் எனவும் தகவல் வெளியானது. இந்நிலையில், தமிழகத்தில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை ஆண்டு இறுதி தேர்வு நடைபெறாது என வெளியான செய்தி தவறானது என பள்ளிக்கல்வித்துறை தற்போது அறிவித்துள்ளது. அதனால் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை  பொதுத்தேர்வு நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது

10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 6-ம் தேதி முதல் மே 30-ம் தேதி வரை பொதுத்தேர்வு நடைபெறுகிறது. 11-ம் வகுப்புக்கு மே 9-ம் தேதி முதல் மே 31-ம் தேதி வரையிலும், 12-ம் வகுப்புக்கு மே 5-ம் தேதி முதல் மே 28-ம் தேதி வரையிலும் பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. 

google

மேலும் படிக்க | மகளை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ய உதவிய தாய்! வீடியோ எடுத்து சித்ரவதை! என்ன நடந்தது?

இந்த கல்வியாண்டுக்கான இறுதி வேலை நாள் மே 13-ம் தேதி என்றும், அடுத்த கல்வியாண்டுக்கான தொடக்க நாள் ஜூன் 13-ம் தேதி என்றும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. 11-ம் வகுப்புக்கு மட்டும் ஜூன் 24-ல் வகுப்புகள் தொடங்க உள்ளது. 

தற்போது 1 முதல் 5-ம் வகுப்பு வரை ஆண்டு பொதுத்தேர்வு நடைபெறாது என பரவிய தகவல் பொய் என பள்ளிக்கல்வித்துறை விளக்கமளித்துள்ளது. இதனையடுத்து பலரும் பள்ளிக்கல்வித்துறை இதுபோன்று தொடர்ந்து குளறுபடிகள் செய்து வருவதாக பெற்றோர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News