நீலகிரி மாவட்டம், குன்னூரை சேர்ந்த தனியார் தேயிலை எஸ்டேட் உரிமையாளரான 67 வயது மூதாட்டிக்கு இன்ஸ்டாகிராமில் மர்ம நபர் ஒருவர் ரெக்குவஸ்ட் கொடுத்துள்ளார்.
அதை மூதாட்டியும் அக்செப்ட் செய்து அந்த நபருடன் பேசியுள்ளார். அந்த நபர் தான் இங்கிலாந்து நாட்டில் இருப்பதாகவும், மனைவி இறந்துவிட்டதால் குழந்தையுடன் வசித்து வருவதாக கூறி பேசி வந்துள்ளார்.
சில நாட்களாக இருவரும் பேசி வந்ததால், இருவருக்கிடையே ஒரு நல்ல விதமான நட்பு மலர்ந்தது.
பின்பு ஒரு கட்டத்தில் அந்த நபர் தனது குழந்தை மூதாட்டிக்கு பரிசு அனுப்புவதாக கூறி ஆசை காட்டியுள்ளார். இதை நம்பிய மூதாட்டியும் குழந்தையின் அன்பு பரிசை எதிர்நோக்கி காத்திருந்தார்.
அடுத்த நாள் சுங்கத்துறை அதிகாரி என பெண் ஒருவர் மூதாட்டியை தொடர்புகொண்டு தங்களின் பரிசுப் பொருளை இந்திய நாட்டில் இறக்குமதி செய்ய வரி செலுத்த வேண்டும் என்றார்.
பின்னர் அந்த நபரும் தான் விலையுயர்ந்த பரிசை அனுப்பியதால் வரி சற்று அதிகமாகவே இருக்கும் என்று கூறியுள்ளார். பரிசு என்னவென்று தெரியாமல் மூதாட்டி ஒரு ஆர்வத்தில் சுங்க அதிகாரி கேட்ட 10 ஆயிரம் டாலர், அதாவது இந்திய மதிப்பில் ரூ.9 லட்சத்தை அவர்கள் தந்த வங்கி விவரத்திற்கு அனுப்பினார்.
ஆனால் சுங்க அதிகாரியோ பணத்தை பெறவில்லை என்று கூறி மீண்டும் முயற்சிக்க கேட்டுள்ளார். அவரை நம்பி மூதாட்டியும் மீண்டும் பணத்தை அனுப்பியுள்ளார். இவ்வாறாக சுங்க அதிகாரி சுமார் 9 முறை கேட்டு மூதாட்டியிடமிருந்து லாவகமாக பணத்தை பறித்துள்ளார் அந்த போலி சுங்க அதிகாரி.
திருப்திகரமான ரூ.73 லட்சம் வந்ததும் சுங்க அதிகாரி பணத்தை பெற்றுவிட்டேன், சற்று நேரத்தில் உங்களுடைய பரிசை அனுப்பி வைக்கிறோம் என்று கூறி இணைப்பை துண்டித்துள்ளனர்.
பின்னர் தனது நண்பரிடம் இது குறித்து சொல்வதற்காக அழைத்தபோது மர்ம நபரின் போன் ஆஃபில் இருந்துள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த மூதாட்டி இதுகுறித்து ஊட்டி சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
நீலகிரி போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத் உத்தரவின் பேரில் சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிலிப் தலைமையில் தனிப்படை அமைத்து மோசடி செய்த நபர்களை தேடி வந்தனர்.
மோசடி செய்த நபர்கள் மும்பையில் இருப்பதாக தகவல் கிடைத்ததை தொடர்ந்து தனிப்படையினர் அங்கு விரைந்தனர்.
வங்கியில் செலுத்திய பணத்தை பெற்றதாக மும்பை தானே பகுதியை சேர்ந்த விஷால் பாபா (வயது 36) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில் அவரது வங்கி கணக்கில் செலுத்திய பணம் ஜார்க்கண்ட், புதுடெல்லி, உத்தரப்பிரதேசம் உள்பட பல கும்பல்களை சேர்ந்த 15 பேரிடம் கை மாறியது தெரியவந்தது.
மேலும் அங்கு சாலையோரத்தில் வசித்து வரும் பிச்சைக்காரர்கள், ஏழை, எளிய மக்களின் வங்கி கணக்குகளை பயன்படுத்தி கும்பல்கள் மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ரூ.5 லட்சத்து 15 ஆயிரம் பறிமுதல் செய்து உரியவர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது என்று போலீசார் தெரிவித்தனர்.
நடப்பாண்டில் இதுவரை நீலகிரியில் ஆன்லைன் மோசடி சம்பந்தமாக 13 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது குறிப்பிடதக்கது.
மேலும் படிக்க | இன்று வளைகாப்பு: நிறை மாத கர்ப்பிணி மரணம்! சந்தேகம் எழுப்பும் தந்தை! என்ன நடந்தது?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR