தந்தையின் குடிப்பழக்கத்தை கைவிட வேண்டும் - மகள் தற்கொலை!

தந்தை குடிப்பழக்கத்தை நிறுத்த வேண்டும் என்று மகள் கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Jun 4, 2023, 06:19 PM IST
  • தந்தை குடிப்பழக்கத்தை நிறுத்த வேண்டும்.
  • கடிதம் எழுதி தற்கொலை செய்துகொண்ட மகள்.
  • வேலூரில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.
தந்தையின் குடிப்பழக்கத்தை கைவிட வேண்டும் - மகள் தற்கொலை! title=

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த சின்னராஜாகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் கூலி தொழிலாளர் பிரபு, இவருக்கு குடிபழக்கம் இருந்துள்ளது. இவரது மகள் விஷ்ணு பிரியா (16) குடியாத்தம் நெல்லூர்பேட்டை பகுதியில் உள்ள அரசு நிதி உதவி பள்ளியில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் சுமார் 410 மதிப்பெண் பெற்றுள்ளார்.  இந்நிலையில் விஷ்ணு பிரியாவின் தந்தைக்கு குடிப்பழக்கத்தால் வீட்டில் அவ்வப்போது சண்டை காரணமாக மனவருத்தியில் இருந்து உள்ளார்.  அதில் மன வேதனை அடைந்த விஷ்ணு பிரியா இன்று மாலை கடிதம் எழுதி வைத்து அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.  அதில் எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை எனது தந்தை குடிப்பழக்கத்தை நிறுத்தி விட வேண்டும் , எனது குடும்பம் எப்பொழுது  மகிழ்ச்சியாக இருக்கின்றதோ அப்போதுதான் எனது ஆத்மா சாந்தி அடையும் என கடிதம் எழுதி வைத்துள்ளார்.  இது குறித்து தகவல் அறிந்த குடியாத்தம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத  பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இது குறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

vellore

vellore

மேலும் படிக்க | அடுத்து என்ன என்பது மத்திய அரசுக்கு தெரியவில்லை - ரயில் விபத்து குறித்து ஆ. ராசா!

தமிழகத்தில் சமீபத்தில் கள்ளச்சாராயம் குடித்து 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.  விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே உள்ள எக்கியார் குப்பம் பகுதியில் கள்ளச்சாராய விற்பனை நடைபெற்று வந்தது. அந்த கள்ளச்சாராயத்தை அதே கிராமத்தை சேர்ந்த 16 பேர் குடித்துள்ளனர். உடனே அதனை உட்கொண்டவர்களுக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர்கள் அனைவரும் புதுவை மற்றும் முண்டியம்பாக்கம் மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கின்றனர். இதையடத்து, அவர்கள் குடித்திருந்த கள்ளச்சாராயத்தில் மெத்தனால் கலந்திருப்பது தெரியவந்தது. அனுமதிக்கப்பட்டவர்களில் சுரேஷ், சங்கர், தரணிவேல் ஆகிய மூன்று பேர் சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். விழுப்புரத்தில் தொடர்ந்து பலர் கள்ளச்சாராயத்திற்கு பலியாகியுள்ளதை ஒட்டி, அந்த மாவட்டம் முழுவதும் பலத்த கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து காவல் துறை அதிகாரிகள் தெரிவிக்கையில், செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் கள்ளச்சாராயத்தினால் உயிரிழந்தவர்கள் குறித்து விசாரணை நடைபெறுவதாகவும், இந்த இரு சம்பவங்களுக்கும் இடையே ஏதாவது தொடர்பு இருக்குமா என்ற வகையிலும் விசாரணை மேற்காெண்டு வருவதாகவும் கூறினர்.

மேலும் சமீபத்தில் டாஸ்மாக் தொழிலாளர் சங்கம் தலைவர் கண்டனம் தெரிவித்து இருந்தனர்.  இன்று 500-டாஸ்மாக் கடைகளை மூடுவோம் என அரசு அறிவித்திருக்கிறார்கள் ஆனால் F1-2 என்ற 500-க்கும் மேற்பட்ட தனியார் கடைகளை திறக்க ஏற்பாடு நடந்து வருகிறது, இதன் மூலம் 500-கோடி ரூபாய் ஆதாயம் அடைவார்கள். இதனால் டாஸ்மாக் ஊழியர் பாதிக்கப்பட்டாலும் அமைச்சர் செந்தில் பாலாஜி பயனடைவார், என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர்கள் என்றும் அமைச்சருக்கு வேண்டியவர்கள் என்றும் (கரூர் குரூப்) அந்த குரூப் அனைத்து மதுபான கடைகளிலும் ஒரு பாட்டிலுக்கு 1-ரூபாய் வாங்கவேண்டும் மேற்கொண்டு நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் வாங்கிக்கொள்ளுங்கள் உங்கள் மீது நடவடிக்கை எடுக்க மாட்டோம், அதை செய்ய மறுக்கும் ஊழியர்கள் பந்தாடப்படுவார்கள், பழிவாங்கப்படுகிறார்கள், இதை BMS சங்கம் வன்மையாக கண்டிக்கிறது என்று பாரதிய டாஸ்மாக் தொழிலாளர் சங்க பொதுசெயலாளர் டி.நாகராஜன் தெரிவித்து இருந்தார்.

மேலும் படிக்க | ஒடிசாவில் இருந்து வந்த சிறப்பு ரயில்... பாதுகாப்பாக தமிழகம் திரும்பிய 137 தமிழர்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News