தஞ்சை மாவட்டத்தில் பிரபல நகைக்கடையான அசோகன் தங்க மாளிகை கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது. இந்த கடை தஞ்சை மட்டுமின்றி திருக்காட்டுப்பள்ளி, பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு ஆகிய பகுதிகளிலும் கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது. இந்த நகை கடையில் சிறுசேமிப்பு திட்டம், நகைகளுக்கு வட்டியில்லா கடன், வீட்டுமனை சிறுசேமிப்பு திட்டம், பழைய நகைக்கு புதிய நகை மாற்றி தருவதாகவும் கூறி பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும் படிக்க | காங்., தென்னிந்திய முகமாக மாறும் கமல்...? ஹேக்கர்களின் சேட்டை - நீடிக்கும் பிரச்னை
தஞ்சை மற்றும் சுற்றுவட்டார 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விளம்பரம் செய்து உள்ளனர். இதனை நம்பி ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிறுசேமிப்பில் சேர்ந்துள்ளனர். மேலும் மற்ற வங்கிகளில் உள்ள அடமானம் வைத்த நகைக்களை மீட்டு, வட்டி இல்லா கடன் என்ற ஆசையில் அசோகன் நகை கடையில் அடகு வைத்துள்ளனர். இந்நிலையில் நகைகளை மீட்பதற்காக கடைக்கு சென்றபோது பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடையிலுள்ள தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் அனைத்தையும் காலி செய்துவிட்டு, கடையை அவர்கள் காலி செய்துள்ளனர்.
இந்த தகவல் அப்பகுதியில் பரவியதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் கடைகளின் முன் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து சம்பவம் இடத்திற்கு வந்த காவல் துறையினர் புகார் அளிக்க வலியுறுத்தினர். இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் தஞ்சை கிழக்கு காவல் நிலையம், ஒரத்தநாடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஏழை எளிய மக்களின் அறியாமையை பயன்படுத்தி அவர்களிடம் ஆசை வார்த்தை கூறி வீட்டுமனை பட்டா வழங்குவதாகவும், வட்டி இல்லாமல் நகை அடமானம் வைத்துக் கொள்ளலாம் என வேறு வங்கியில் உள்ள நகைகளை மீட்டு வந்து இந்த வங்கியில் வைத்தது என பத்தாயிரம் ரூபாய் முதல் 5 லட்சம், 10 லட்சம் ரூபாய் வரை பலரும் ஏமாந்துள்ளனர். மிகவும் சிரமப்பட்டு உழைத்த தொகையை தங்களுக்கு மீண்டும் பெற்று தர வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கின்றனர்.
மேலும் படிக்க | ஆளுநர் தேநீர் விருந்தில் முதலமைச்சர் கலந்துகொண்டது ஏன்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ