நாம் நகைகளை அடிக்கடி பயன்படுத்துவதால் அதில் அழுக்கு படித்து எளிதில் அதன் தன்மை மங்கிவிடும் என்பதால் வீட்டிலேயே சில எளிய முறைகளை பயன்படுத்தி நகைகளை சுத்தம் செய்யலாம்.
தஞ்சாவூரில் நகைக்கு வட்டி இல்லா கடன், சிறுசேமிப்பு திட்டம் என கவர்ச்சிகரமான விளம்பரங்கள் மூலம் தஞ்சை மாவட்டத்தில் மட்டும் சுமார் 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் 1000க்கும் மேற்பட்ட பொதுமக்களை ஏமாற்றிய நகைக்கடை உரிமையாளர் தலைமறைவாகியுள்ளார்.
சென்னையில் சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு தொழிலதிபரை ஏமாற்றி 550 சவரன் தங்க நகைகள் மற்றும் ,பல லட்ச ரூபாய் பணத்தை, இளம்பெண் ஒருவர் சுருட்டிய சம்பவம் கடந்த வாரம் அதிர்வுகளை ஏற்படுத்தியது. சினிமா ஆசையில், சின்னாபின்னமாகிய சிவப்பழகியை, சிறையில் அடைத்த வைத்த சம்பவத்தின் முழு பின்னணி இதோ....
காட்பாடி அடுத்த சேர்க்காட்டில் உள்ள நகை அடகு கடையின் சுவற்றில் துளையிட்டு சுமார் 75 லட்சம் மதிப்புள்ள தங்கநகைகள், வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஆட்சியில் கூட்டுறவு வங்கிகளில் நகைகடன் வழங்கியதில் பல கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளது என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி நெல்லையில் தெரிவித்துள்ளார்.
இந்த கொரோனா காலத்தில் திருமணம் ஒன்றில் கலந்துக் கொண்ட பெண்ணின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிறது. திருமணத்தில் கலந்துக் கொண்டதற்காக புகைப்படம் வைரலாகவில்லை. கொரோனா காலத்திலும் அவர் முகக்கவசத்தின் மீது நகை அணிந்திருக்கும் விதம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
ஆபரண நகை பிராண்டு நிறுவனம் தனீஷ்க் மீண்டும் சர்ச்சையில் சிக்கித் தவிக்கிறது. #boycotttanishq என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் பிரபலமாகிவிட்டது. சென்ற மாதம் தான் மத நல்லிணக்கம் என்ற கருவின் அடிப்படையில் வெளியான ஒரு விளம்பரம் ஏற்படுத்திய சர்ச்சைக்கு பிறகு அந்த விளம்பரம் திரும்பப் பெறப்பட்டது.
ட்விட்டரில் #BoycottTanishq என்ற ஹேஷ்டேக் ஏற்படுத்திய புயலுக்கு பிறகு, தவறை ஒப்புக்கொண்ட தனிஷ்க் ஆபரண நிறுவனம், தனது விளம்பரத்தை திரும்பப் பெற்றுக் கொண்டது. இதன் பின்னணி என்ன? தெரிந்துக் கொள்வோம்… தனீஷ்கின் இப்போது திரும்பப் பெறப்பட்ட விளம்பரம் சமூக ஊடகங்களில் பல தீவிர விவாதங்களைத் திறந்துள்ளது.
கொரோனா பாதிப்பினால் அனைவரும் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டியிருக்கிறது. நகைகளை அணியவே முடியவில்லை. இந்த இரண்டையும் இணைத்து புதுமையாக தங்க முகக்கவசங்கள் விற்பனைக்கு வந்துவிட்டன. தேவை அதிகமாக இருக்கிறதாம்!!!
சேலம் செவ்வாய்ப்பேட்டை பகுதியில் இரும்புக் கடை நடத்தி வருகிறார் தொழிலதிபர் விஜயலட்சுமி. கிச்சிப்பாளையம் பகுதியில் வசித்து வரும் இவர் தன்னுடைய குடும்பத்தாருடன் திருப்பதி சென்று விட்டு இன்று அதிகாலை திரும்பியுள்ளார். வீட்டின் மேல்புறத்தில் உள்ள தன்னுடைய அறைக்கு சென்ற விஜயலட்சுமி ஜன்னல் உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உள்ளே சென்று பார்த்த போது பீரோ பீரோவில் சாவி போட்டு உள்ளே வைக்கப்பட்டிருந்த 720 சவரன் நகை மற்றும் 2 லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.
ஆந்தர பிரதேஷ் குன்டூரில் உள்ள ஜிவல்லர்ஸ் கடையில் ஒரு குரங்கு நுழைந்தது. 20 நிமிடம் வரை தொந்தரவு செய்தது. அங்கு வேலைசெய்யும் அதிகாரிகள் அதை துரத்திவிட மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்தன. அதற்கு சாப்பிட உணவுகள் தரப்பட்டது. ஆனாலும் குரங்கு அங்கிருந்து வெளியே செல்லவில்லை.
கடைசியாக குரங்கு நேரா பணம் வைத்திருக்கும் கவுண்டருக்குள் நுழைந்து அங்கிருந்து 1௦ ஆயிரம் பணத்தை எடுத்துகொண்டு கடையில் இருந்து வெளியேறுகிறது.