எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக விசாரணை குழு! லஞ்ச ஒழிப்புத் துறை தகவல்!

முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில் நெடுஞ்சாலைத் துறையில் டெண்டர் கோரியதில்  4,800 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக ஆர்.எஸ் பாரதி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.  

Written by - RK Spark | Last Updated : Jul 7, 2023, 08:26 AM IST
  • நெடுஞ்சாலைத் துறையில் 4, 800 கோடி ரூபாய் முறைகேடு.
  • சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு.
  • சிபிஐ விசாரணை நடத்தும்படி, 2018ம் ஆண்டு உத்தரவிட்டிருந்தது.
எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக விசாரணை குழு! லஞ்ச ஒழிப்புத் துறை தகவல்! title=

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான நெடுஞ்சாலை துறை முறைகேடு புகார் தொடர்பாக புதிதாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.  முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில் நெடுஞ்சாலைத் துறையில் டெண்டர் கோரியதில்  4, 800 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக கூறி, முன்னாள் மிதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக அளித்த புகார் மீது சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து விசாரிக்க உத்தரவிடக் கோரி திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.  இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், நெடுஞ்சாலை துறை டெண்டர் முறைகேடு புகார் குறித்து சிபிஐ விசாரணை நடத்தும்படி, 2018ம் ஆண்டு உத்தரவிட்டிருந்தது.

மேலும் படிக்க | ஓ.பி.ரவீந்திரநாத் வெற்றி செல்லாது... சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி!

இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ததுடன், வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றியிருந்தது.  இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கை திரும்பப் பெற அனுமதிக்க வேண்டுமென ஆர்.எஸ்.பாரதி தரப்பில் கோரப்பட்டது.  லஞ்ச ஒழிப்பு துறை தரப்பில், எடப்பாடி பழனிச்சாமி மீது குற்றமில்லை என கடந்த 2018ம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையை  விஜிலென்ஸ் ஆணையர் ஏற்கவில்லை என்றும்,  மீண்டும் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். எடப்பாடி பழனிச்சாமி தரப்பில், மனுதாரர் தரப்பில் கோரிக்கை வைக்கப்படாத நிலையில், ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையை படிக்காமல் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டதாகவும், அதனால் 2018ம் ஆண்டு ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையின் அடிப்படையில் இந்த வழக்கை முடிக்க வேண்டும் எனவும், திரும்பப் பெற அனுமதிக்க கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டது.  இந்த வாதங்களை கேட்ட நீதிபதி, விசாரணையை ஜூலை 13ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.

மேலும், ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்துள்ள பர்கூர் வனப்பகுதி விலங்குகள் சரணாலயமாக மாற்றப்படும் என தமிழக அரசு அறிவித்ததற்கு மலைவாழ் பழங்குடியின மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் பர்கூர் மலைப்பகுதியில் தாமரை கரையில் அதிமுகவின் சார்பில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 500க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் உள்ளிட்ட பங்கேற்று வனவிலங்குகள் சரணாலயம் அமைக்க முடிவினை தமிழக அரசு மறுபரிசனை செய்ய வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், பர்கூர் வனப்பகுதி சரணாலயம் அமைக்கப்பட்டால் மலைவாழ் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படும். தமிழக கர்நாடக மாநிலம் இடையேயான உற்பத்தி செய்யப்படும் விவசாய விளைபொருட்களை ஏற்றி செல்லும் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவது உடன் பழங்குடியின மக்கள் பல்வேறு இன்னலுக்கு ஆளாகும் சூழ்நிலை ஏற்படும் என குற்றம் சாட்டினார்.

தொடர்ந்து மலைவாழ் கிராமங்களில் உள்ள நியாய விலை கடைகளில் தரமற்ற பொருட்களை வழங்குவதாக புகார் எழுந்துள்ளதால் மாவட்ட நிர்வாகம் உரிய ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கூறினார். தொடர்ந்து பேசியவர் தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான கூட்டணி வெற்றி பெறுவதை தொடர்ந்து 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலிலும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் வெற்றி பெற்று கோட்டையில் அமரவும் என நம்பிக்கை தெரிவித்தார். பள்ளிகளுத்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் எல்லோருக்கும் கல்வி கிடைக்கும் வகையில் துறையில் தோல்வி ஏற்படாமல் செயல்பட வேண்டுமென முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அறிவுறுத்தினார்.

மேலும் படிக்க | Tomato price: தக்காளி விலை எப்போது குறையும்? வெளியான அதிர்ச்சி தகவல்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News