மதுரை மாவட்டத்தில் மேலும் 295 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 7,285 ஆக அதிகரிப்பு..!
மதுரையில் கொரோனா வைரஸ் வேகமாக பரவியதால் முழு ஊரடங்கு மேலும் 2 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டது. மதுரை மாநகராட்சி, பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மேற்கு மற்றும் திருப்பரங்குன்றம் பகுதியில் இந்த ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இந்நிலையில், 21 நாட்களாக நீடித்த ஊரடங்கு நேற்று நள்ளிரவுடன் ஊரடங்கு முடிவுக்கு வந்ததாக தமிழக அரசாணை வெளியிடப்பட்டது. இதன்படி இன்று முதல் தேநீர் கடைகள், IT பார்க், வாடகை வாகன மையங்கள், இறைச்சிக் கடைகள், மீன் மார்க்கெட்கள், கிராமப் புறங்கள், புறநகர்களில் உள்ள சிறிய வழிபாட்டுத் தலங்கள், ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, தனியார் அலுவலகங்கள் அனைத்தும் இயங்கலாம். ஜவுளி, நகைக்கடைகள், காய்கறி, அத்தியா வசியப் பொருட்கள் கடைகள், டாஸ்மாக் கடைகள், ஆட்டோக்கள், வாடகை வாகனங்கள் இரவு 8 மணி வரை இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேநேரம் பெரிய கோயில்கள், வழிபாட்டுத் தலங்கள், சுற்றுலாத் தலங்கள், ஷாப்பிங் மால்கள், திரையரங் குகள், ஜிம்கள், விளையாட்டு மைதானங்கள், கல்வி நிறுவனங்கள், தனியார் பயிற்சி நிறுவனங்கள், நீச்சல் குளங்கள் உள்ளிட்டவை செயல்பட தடை நீடிக்கிறது.
READ | சச்சின் பைலட் காங்., கட்சியின் சிறந்த நபர்களில் ஒருவர்: சசி தரூர் வேதனை!
வரும் 31 ஆம் தேதி வரை அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளிலும் மக்கள் நெரிசலை தவிர்க்க வழக்கம்போல, முழு ஊரடங்கை அமல்படுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை சென்னையில் குறைந்து வரும் நிலையில், மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இந்நிலையில், மதுரையில் ஏற்கனவே கொரோனா தோற்றுடையவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்தை தாண்டியுள்ள நிலையில், மதுரை மாவட்டத்தில் மேலும் 295 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,285 ஆக அதிகரித்துள்ளது. மதுரையில் கொரோனா தொற்றில் இருந்து இதுவரை 2,667 பேர் குணமடைந்துள்ள நிலையில், 124 பேர் உயிரிழந்துள்ளனர்.