மும்மொழிக் கொள்கையை பாஜக அரசு கனவில் கூட நினைக்கக் கூடாது: MSK

மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவது பேரிடரை ஏற்படுத்திவிடும் என எச்சரிக்கிறேன்!!

Last Updated : Jun 1, 2019, 08:27 PM IST
மும்மொழிக் கொள்கையை பாஜக அரசு கனவில் கூட நினைக்கக் கூடாது: MSK title=

மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவது பேரிடரை ஏற்படுத்திவிடும் என எச்சரிக்கிறேன்!!

இந்தி உட்பட மும்மொழி திட்டத்தை அமல்படுத்த கஸ்தூரி ரங்கன் தலைமையிலான குழு பரிந்துரைத்துள்ளது. நாட்டை பிளவுபடுத்தும் பரிந்துரையை கஸ்தூரி ரங்கன் குழு அளித்திருப்பது அதிர்ச்சிஇ தருவதாக ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதிமுக அரசை மிரட்டி மும்மொழி திட்டத்தை நிறைவேற்ற மத்திய பாஜக அரசு கனவு காண்கிறதா என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கை உள்நோக்கம் நிறைந்த அறிக்கையே என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. கஸ்தூரி ரங்கன் குழு வரலாறுகளை ஆராய்ந்ததாகவோ, அடிப்படை நோக்கங்களை புரிந்ததாகவோ தெரியவில்லை. நாட்டின் ஒருமைப்பாட்டையும், செம்மொழியாம் தாய்த் தமிழைச் சிறுமைப்படுத்தி ஒதுக்கவும், மொழி வாரி மாநிலங்களின் தேசிய உணர்வுகளில் வெந்நீர் ஊற்றும் விதத்திலும், ப்ரீ ஸ்கூல் முதல் 12 ஆம் வகுப்பு வரை இந்தி வழிக் கல்வி என்ற விபரீதமாக நாட்டைப் பிளவுபடுத்தும் பரிந்துரையை புதிய கல்விக் கொள்கை வகுக்கும் குழு அளித்திருப்பது பேரதிர்ச்சியளிக்கிறது.

தமிழ்நாட்டில் உள்ள இருமொழிக் கொள்கையை மாற்ற முயற்சிப்பது தேன்கூட்டில் கல் வீசுவது போன்றது. இருமொழிக் கொள்கை என்ற தேன் கூட்டில் கல்லெறிய வேண்டாம். மும்மொழிக் கொள்கையை பாஜக அரசு கனவில் கூட நினைக்கக் கூடாது. மும்மொழிக் கொள்ளையை அமல்படுத்துவது பேரிடரை ஏற்படுத்தி விடும். இந்தி பேசாத மாநிலங்கள் விரும்பும் வரை ஆங்கிலம் நீடிக்கும் என்று பிரதமர் பண்டித நேருவின் உறுதிமொழி இன்னும் நாடாளுமன்றத்தின் பதிவேடுகளில் இருக்கிறது. இருமொழிக் கொள்கைத் தீர்மானத்தின் மீது தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆக்கபூர்வமான விவாதங்கள் நடைபெற்று இனி பள்ளிகளில் இந்தி வேண்டாம் என்று 50 வருடங்களுக்கு முன்பே நிறைவேற்றப்பட்டது இன்னும் சட்டமன்றப் பதிவேடுகளில் இருக்கிறது.

மும்மொழிக் கொள்கைக்கு திமுக எம்பிக்கள் பாராளுமன்றத்தில் எதிர்ப்புத் தெரிவிப்பார்கள். அன்னைத் தமிழின் பெருமையை சீர்குலைக்கும் எந்தவித பரிந்துரைகளையும் திமுக ஏற்றுக்கொள்ளாது. மொழிப்போர் தியாகிகளுக்கு திமுக வீரவணக்கம் செலுத்தி வருவதை பாஜக மறந்துவிட்டதோ? எனவே, இந்தியை திணிக்கும் பரிந்துரையை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும்.

 

Trending News