திருமணம் ஆனவுடன் குழந்தை பிறக்காது; அதுபோல அரசு திட்டமும்: செங்கோட்டையன்!!

திருமணம் ஆனவுடன் குழந்தை பிறக்காது; அதுபோல அரசு திட்ட செயல்பாடுகள் போகபோகத்தான் தெரியும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்! 

Updated: Mar 7, 2019, 03:25 PM IST
திருமணம் ஆனவுடன் குழந்தை பிறக்காது; அதுபோல அரசு திட்டமும்: செங்கோட்டையன்!!

திருமணம் ஆனவுடன் குழந்தை பிறக்காது; அதுபோல அரசு திட்ட செயல்பாடுகள் போகபோகத்தான் தெரியும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்! 

பள்ளிக்கல்வித் துறையில் அறிவிக்கப்படும் திட்டங்கள் எதுவும் நடைமுறைக்கு வருதில்லை என்ற திமுகவின் விமர்சனத்துக்கு, கல்யாணம் ஆன உடனேயே குழந்தை பிறந்துவிடாது என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அசத்தலாக பதிலளித்துள்ளார். 
பள்ளிக்கல்வித் துறையில் அறிவிக்கப்படும் திட்டங்கள் எதுவும் நடைமுறைக்கு வருவதில்லை என்று திமுகவைச் சேர்ந்த ஐ.பெரியசாமி அண்மையில் விமர்சித்திருந்தார்.

இது தொடர்பாக, தமிழக  பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனிடம் இன்று கேள்வியெழுப்பட்டது. அதற்கு, "பள்ளிக்கல்வித் துறையின் திட்டங்கள் குறித்து பெரியசாமியுடன் விவாதம் நடத்த தயார். இந்த ஆண்டு அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களின் செயல்பாடுகள், அடுத்த  ஆண்டுதான் தெரிய வரும். ஒருவருக்கு கல்யாணம் ஆனதும் உடனே குழந்தை பிறந்துவிடாது" என்று அமைச்சர் அசத்தலாக பதிலளித்தார்.

மேலும், அவர் பேசுகையில், பொதுத் தேர்வு விடைத்தாள்களை திருத்தும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் தொகையை அதிகரிக்க கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் கணினி மயமாக்கப்பட்ட தானியங்கி மின் தடை பதிவு மையத்தின் துவக்க விழாவில் அவர் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் செங்கோட்டையன், முடிவு செய்யப்பட்டுள்ள தேதியில் பொதுத்தேர்வு முடிவுகள் கண்டிப்பாக வெளியாகும் என கூறினார்.