பொதுமுடக்கத்தில் தளர்வுகளை ஏற்படுத்தி கோயம்பேடு மார்க்கெட்டில் கொரோனா பரவலை அதிகரித்துவிட்டதாக திமுக மாவட்ட செயலாளர்களுடன் காணொலியில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு....
கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருந்து வரும் நிலையில், பொதுமுடக்கத்தில் தளர்வுகளை ஏற்படுத்தி கோயம்பேடு மார்க்கெட்டில் கொரோனா பரவலை அதிகரித்துவிட்டதாக திமுக மாவட்ட செயலாளர்களுடன் காணொலியில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து கட்சிகள், தொண்டு நிறுவனங்கள் நிவாரண உதவியை வழங்கி வருகின்றன. அந்தவகையில் பிரதான எதிர்க்கட்சியான DMK ‘ஒன்றிணைவோம் வா’ செயல் திட்டம் மூலம் மக்களின் குறைகளை கேட்டு, நிவர்த்தி செய்து வருகிறது. அவ்வப்போது நிர்வாகிகளுடன் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வழியாக உரையாடி வருகிறார்.
இந்தக் கூட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகளை ஆளும் அதிமுக அரசு எவ்வாறு மேற்கொண்டு வருகிறது, மக்களுக்கு நிவாரணப் பொருள்கள் கிடைக்கப் பெறுகின்றதா, அதிகமாக பாதிக்கப்படும் சென்னையில் அரசு என்ன மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொள்கிறது என்பது குறித்து கேட்டறிந்தார்.
மேலும் திமுகவில் பொதுச் செயலாளர், பொருளாளர் பதவிகள் காலியாக உள்ளன. கொரோனா ஊரடங்கிற்கு முன்பாகவே மார்ச் 15 ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் மார்ச் 29 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் பொதுக்குழு கூட்டம் ரத்து செய்யப்பட்டது.
இதை தொடர்ந்து அவர் பேசுகையில்..... கொரோனா பரிசோதனையை தமிழக அரசு சரிவர செய்யவில்லை. மேலும் ஊரடங்கில் தளர்வுகளை ஏற்படுத்தி கோயம்பேடு மார்கெட்டில் கொரோனா வர செய்துவிட்டனர் என குற்றம்சாட்டியுள்ளார்.