வருமான வரி தாக்கலுக்கு இன்றே கடைசி நாள்....!

2017 - 2018 நிதி ஆண்டிக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு இன்று கடைசி நாள்...! 

Last Updated : Aug 31, 2018, 09:14 AM IST
வருமான வரி தாக்கலுக்கு இன்றே கடைசி நாள்....!  title=

2017 - 2018 நிதி ஆண்டிக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு இன்று கடைசி நாள்...! 

மாத ஊதியம், ஓய்வூதியம், வீட்டு வாடகை உள்ளிட்ட சொத்து வருமானம் பெறுபவர்கள், இதர வருமானம் பெறுவோர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கடந்த ஜூலை 31 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை கெடு நீட்டிக்கப்பட்டது. இதன்படி இன்று கணக்கு தாக்கல் செய்ய கடைசி நாள் ஆகும். தவறினால், மொத்த ஆண்டு வருவாய் 5 லட்சம் ரூபாய்க்கு கீழ் உள்ளவர்கள் 1,000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும்.

5 லட்சத்துக்கு மேல் வருவாய் உள்ளவர்கள் டிசம்பர் 31க்குள் தாக்கல் செய்ய தாமத கட்டணமாக 5,000 ரூபாயும் , மார்ச் 31 வரை 10,000 ரூபாயும் அபராதம் செலுத்த வேண்டும். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்தை சேர்ந்தோர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய செப்டம்பர் 15 ஆம் தேதி வரை காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

 

Trending News