பெரியாரின் பெயரை தவறாக பதிவிட்டவர்கள் மீது நடவடிக்கை: TNPSC அறிக்கை

குரூப்-2 தேர்வு வினாத்தாளில் தந்தை பெரியாரின் பெயரை தவறாக பதிவிட்டவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என TNPSC அறிக்கை வெளியீடு.... 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 12, 2018, 06:06 PM IST
பெரியாரின் பெயரை தவறாக பதிவிட்டவர்கள் மீது நடவடிக்கை: TNPSC அறிக்கை title=

குரூப்-2 தேர்வு வினாத்தாளில் தந்தை பெரியாரின் பெயரை தவறாக பதிவிட்டவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என TNPSC அறிக்கை வெளியீடு.... 

தமிழக அரசுத்துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி பல்வேறு படிநிலைகளில் தேர்வு நடத்தி பணியாளர்களை நியமித்து வருகிறது. அந்த வகையில், அரசு துறைகளில் காலியாக உள்ள 1,199 இடங்களுக்கான 'குரூப் - 2' முதல் நிலை பதவிக்கு விண்ணப்பிந்திருந்தவர்களுகான தேர்வு நேற்று நடைபெற்றது. சார் பதிவாளர், வருவாய்த் துறை உதவியாளர், தொழிலாளர் உதவி ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அதிகாரி  உள்ளிட்ட பணிகளுக்கு தகுதி வாய்ந்தவர்களை தேர்வு செய்யும் நோக்கில் இத்தேர்வு நடைபெற்றது. 
 
நேற்று நடைபெற்ற இந்தத் தேர்வை 6.26 லட்சம் பேர் எழுதியுள்ளனர். வெறும் 1,199 காலியிடங்களுக்காக நடத்தப்பட்ட இத்தேர்வை ஆறு லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதியுள்ளனர். இதில், 56 சதவீதம் பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தேர்வு சுமார் 1199 பணியிடங்களுக்காக, 2268 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை சுமார் 6,26,726 பேர் எழுதுயுள்ளனர். இந்நிலையில், நேற்று நடைபெற்ற தேர்வில் கேட்கப்பட்ட கேள்வி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. 

இதில், 'திருச்செங்கோடு ஆசிரமத்தை நிறுவியவர் யார்?' என்ற கேள்வி கேட்கப்பட்டிருந்தது.அதற்கான பதிலில் ஒரு ஆப்ஷனாக பெரியாரின் பெயர் 'இ.வெ.ரா. ராமசாமி நாயக்கர்' என குறிப்பிடப்பட்டிருந்தது. சாதிக்கு எதிராக போராடிய அவரின் பெயர் சாதியுடன், அதுவும் ஒரு அரசு தேர்வுத்தாளில் இடம்பெற்றிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பெரியாரின் பெயர் 'ஈ.வெ.ரா' என்பதற்கு பதிலாக 'இ.வெ.ரா' என பிழையுடன் அச்சிடப்பட்டிருந்தது. 

இந்நிலையில், இதுகுறித்து TNPSC அறிக்கை அறிக்கை ஒன்ற்றஈ வெளியிட்டுள்ளது. அதில், “குரூப் 2 வினாத்தாளில் கேட்கப்பட்ட கேள்விகள் குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது. வினாத்தாள் தயாரிக்கும் நிபுணர் குழு தான் வினாத்தாள்களை தயாரித்து சீலிட்டு அனுப்புகிறாது. குரூப் 2 தேர்வு பிரச்சனை குறித்து தேர்வு எழுதியவர்கள் நவம்பர் 13 ஆம் முதல் முறையிடலாம். இது குறித்து முழுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், மிகுந்த கவனத்தோடு தயாரிக்கப்பட்டும், தந்தை பெரியாரின் பெயரை தவறாக குறிப்பிட்டதற்கு வருத்தம் தருவதாகவும் இனி இது போன்ற பிரச்சனைகள் வராது”  என தெரிவித்துள்ளது.

 

Trending News