திருச்செந்தூர் கோவில் மயில் சிலை சேதம்: அறநிலையத்துறை அதிகாரி மீது வழக்குபதிவு

திருச்செந்தூர் முருகன் கோவிலில் உள்ள மயில் சிலை சேதம் அடைந்தது தொடர்பாக, அறநிலையத் துறை இணை ஆணையர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Last Updated : May 2, 2019, 11:41 AM IST
திருச்செந்தூர் கோவில் மயில் சிலை சேதம்: அறநிலையத்துறை அதிகாரி மீது வழக்குபதிவு title=

திருச்செந்தூர் முருகன் கோவிலில் உள்ள மயில் சிலை சேதம் அடைந்தது தொடர்பாக, அறநிலையத் துறை இணை ஆணையர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2017ம் ஆண்டு திருச்செந்தூர் முருகன் கோவிலில் கருவறைக்கு எதிரில் உள்ள பழங்கால மயில் சிலையை மாற்றப்பட்டு புதிய சிலையை வைக்கப்பட்டது. இது குறித்து போலீசில் புகார் அளிக்காமல் அதனை மறைக்க சிலர் முயற்சிகள் மேற்கொண்டனர்.

இதனை தொடர்ந்து, பொன் மாணிக்கவேல் தலைமையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், கோவிலில் மயில் சிலை திருடப்பட்டது அம்பலமானது. இதனை தொடர்ந்து, இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் பரஞ்ஜோதி, சூப்பிரண்டு பத்மநாதன், திருமேணி காவல் பணியாளர்கள் சுவாமிநாதன், ராஜகுமார் மற்றும் சுரேஷ் ஆகியோர் மீது தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

Trending News