திருவையாறு ஐயாறப்பர் கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

திருவையாறு ஐயாறப்பர் கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. சித்திரை விழாவானது 26 தேதி வரை நடைபெறுகிறது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 14, 2024, 03:08 PM IST
  • சித்திரை விழாவானது 26 தேதி வரை நடைபெறுகிறது.
  • சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
  • இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்னர்.
திருவையாறு ஐயாறப்பர் கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது title=

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு தருமை ஆதீனத்திற்குச் சொந்தமான ஸ்ரீ அறம் வளர்த்த நாயகி அம்மன் உடனாகிய ஐயாறப்பர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான சித்திரைத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.  

முன்னதாக கொடிகம்பத்திற்கு பால், சந்தனம் போன்ற திரவியப் பொருட்களைக் கொண்டு அபிஷேகம் தீபாராதனை நடைபெற்றது. நான்கு முக்கிய வீதிகளில் மேலதாள வாத்திய கச்சேரியுடன் கொடி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்னர்.

13 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் தன்னைத்தான் பூஜித்தல் வருகிற 18 ஆம் தேதியும், தேரோட்டம் 22 ஆம் தேதியும் நடைபெறுகிறது. அன்று காலை ஐயாறப்பர் அறம் வளர்த்த நாயகியுடன் தேரில் அமர்ந்து பஞ்ச மூர்த்திகளுடன் திருவையாறு நான்கு வீதிகளிலும் தேரோட்டம் நடைபெறும்.

மேலும் படிக்க | தேர்தலுக்கு பிறகு உரிமை தொகையை திமுக நிறுத்திவிடும் - நடிகை காயத்ரி ரகுராம்!

அதைத் தொடர்ந்து 25 ஆம் தேதி முக்கிய திருநாளான சப்தஸ்தான பெருவிழாவில் காலை ஐயாறப்பர் அறம்வளர்த்த நாயகியுடன் கண்ணாடி பல்லக்கிலும், நந்திகேஸ்வர் சுயசாம்பிகையுடன் வெட்டிவேர் பல்லக்கில் புறப்பட்டு திருப்பழனம், திருசோற்றுத்துறை, திருவேதிகுடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, சென்று அன்று இரவு காவிரி ஆற்றில் 6 ஊர் பல்லக்குகளும் தில்லை ஸ்தானத்தில் சங்கமிக்கிறது. அன்று இரவு தில்லைஸ்தானம் காவிரி ஆற்றில் வானவேடிக்கையும் நடைபெறுகிறது.

மறுநாள் 26 ஆம் தேதி தில்லைஸ்தானம் பல்லக்குடன் 7 ஊர் பல்லக்களும் திருவையாறு வீதிகளில் உலா வந்து தேரடியில் பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பொம்மை பூ போடும் நிகழ்ச்சி முடிந்தவுடன் 6 ஊர் பல்லக்குகளும் கோயிலுக்குச் சென்று தீபாரதனை முடிந்து அந்தந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்லும்.

விழா ஏற்பாடுகளை தருமபுர ஆதீன குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் தலைமையில் கோயில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

மேலும் படிக்க | அண்ணாமலைக்கு வாய் கொழுப்பு அதிகம், வரலாற்றை தெரிஞ்சுக்க தம்பி - ஜெயக்குமார் விளாசல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News