திருவாரூர் தொகுதியில் வரும் ஜனவரி 28-ஆம் நாள் இடைத்தேர்தல்!

திருவாரூர் தொகுதியில் வரும் ஜனவரி 28-ஆம் நாள் இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது!

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 31, 2018, 05:41 PM IST
திருவாரூர் தொகுதியில் வரும் ஜனவரி 28-ஆம் நாள் இடைத்தேர்தல்! title=

திருவாரூர் தொகுதியில் வரும் ஜனவரி 28-ஆம் நாள் இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது!

திமுக தலைவர் கருணாநிதி அவர்களின் மறைவையொட்டி திருவாரூர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அதிமுக எம்.எல்.ஏ போஸ் மறைவையொட்டி திருப்பரங்குன்றம் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இரு தொகுதிகளுக்கும் விரைவில் தேர்தல் நடத்த வேண்டுமென சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் கே.கே.ரமேஷ் என்பவர் வழக்கு தொடத்தார்.
 
இந்த வழக்கில் கடந்த நவம்பர் 26-ஆம் நாள் தமிழக தலைமை தேர்தல் ஆணையம் பதில் அளித்தது,  இந்த பதில் மனுவில், 'வழக்கமாக ஒரு தொகுதி காலியாகி 6 மாதத்திற்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதன்படி திருவாரூர் தொகுதிக்கு வருகிற  பிப்., 7-ஆம் தேதிக்குள் தேர்தல் நடத்தப்படும். ஆனால் திருப்பரங்குன்றம் தேர்தல் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால், வழக்கு முடிந்த பின்னரே தேர்தல் நடத்தப்படும்' என குறிப்பிட்டது. 

இந்நிலையில் இன்று, திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பினை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. வெளியான அறிவிப்பின் படி, திருவாரூர் தொகுதியில் தேர்தல் விதிமுறைகள் உடனடியாக அமுலுக்கு வந்தன.

திருவாரூர் இடைத்தேர்தல் முக்கிய தேதிகள்...

  • வேட்புமனு தாக்கல் - 03.01.2019
  • வேட்புமனு கடைசி நாள் - 10.01.2019
  • வேட்புமனு திரும்ப பெற - 14.01.2019 
  • தேர்தல் நாள் - 28.01.2019
  • வாக்கு எண்ணிக்கை - 31.01.2019

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல்...

மதுரை திருப்பரங்குன்றம் தொகுதியில் கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பரில் நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிமுக-வின் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றதாக  அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த வெற்றியினை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு திமுக சார்பில் போட்டியிட்ட டாக்டர் சரவணன் வழக்க தொடர்ந்தார். மேலும் ஜெயலலிதாவின் கைரேகையில் சந்தேகம் இருப்பதால், ஏ.கே.போஸ் பெற்ற வெற்றி செல்லாது என அறிவித்து, அடுத்ததாக அதிக வாக்குகள் பெற்ற தன்னை வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டும் எனவும் இந்த மனுவில் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு தற்போது உயர்நீதிமன்றத்தி நடைப்பெற்று வருகின்றது.

இவ்வழக்கில் ஏ.கே.போஸ் வெற்றி செல்லாது என்று தீர்ப்பு வெளியாகும் பட்சத்தில், திருப்பரங்குன்றம் தொகுதியில் இடைத்தேர்தல் நடக்குமா என்பதே பெரும் கேள்விக்குறியாக அமையும்.

Trending News