திருச்செந்தூர் கோவில் யானை தாக்கி... பாகனும் உறவினரும் பலி - பக்தர்கள் சோகம்

Tiruchendur Temple Elephant Attack: திருச்செந்தூர் முருகன் கோயிலில் வளர்க்கப்படும் தெய்வானை என்ற யானை இருவரை தாக்கியதில், அவர்கள் உயிரிழந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Written by - Sudharsan G | Last Updated : Nov 18, 2024, 05:54 PM IST
  • யானைக்கு மதம் பிடிக்கவில்லை - வனத்துறை
  • உதயகுமார் உதவிப் பாகனாக அங்கு பணியாற்றி வந்துள்ளார்.
  • இதற்கு முன்னதாகவே யானை அறிகுறிகளை காட்டியிருக்கிறது.
திருச்செந்தூர் கோவில் யானை தாக்கி... பாகனும் உறவினரும் பலி - பக்தர்கள் சோகம்  title=

Tiruchendur Murugan Temple Elephant Attack: முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாவது வீடாக கருதப்படும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தெய்வானை எனும் பெண் யானை கோவில் நிர்வாகம் சார்பில் வளர்க்கப்பட்டு வருகிறது. யானை தெய்வானையை, அதன் பாகன் பராமரித்து வரும் நிலையில், விலாச மண்டபம் அருகே யானையை கட்டிப்போடும் பகுதி இருக்கிறது. 

தற்போது அந்த யானை கட்டி இருக்கக்கூடிய பகுதியில் தெய்வானை யானையை பராமரிக்க கூடிய பாகன் மற்றும் வேறு ஒருவரையும் யானை தெய்வானை தாக்கியதாகவும், அதற்கு பின்பாக எந்த அசைவும் இன்றி இருவரும் யானை கட்டிருக்க கூடிய பகுதியில் கிடப்பதாகவும் தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில், இருவரும் உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த பாகனின் பெயர் உதயகுமார் எனவும், மற்றொருவர் அவரின் உறவினர் சிசுபாலன் எனவும் உறுதியாகி உள்ளது. 

யானைப்பாகன் உதயகுமார் (45), யானை பாகன் உறவினர் சிசுபாலன் ஆகிய இருவரை யானை திடீரென மிதித்ததில் அவர்கள் பலத்த காயமடைந்தனர். இதனையடுத்து திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டது. அவர்களை பரிசோதித்த மருத்துவர் இரண்டு பேரும் உயிரிழந்துவிட்டதாக உறுதிசெய்தார்.

மேலும் படிக்க | 'ஸ்டாலின் வீட்டுக்கு ரெய்டு வராதது ஏன் தெரியுமா...?' - சீமான் சொல்லும் சீக்ரெட்டை பாருங்க

நடந்தது என்ன?

கோவிலில் யானையை பராமரிக்கக் கூடிய பணியில் மூன்று பாகன்கள் இருக்கிறார்கள். அதில் ஒருவர் தான் இறந்த உதவி பாகன் உதயகுமார். உதயகுமாரின் உறவினரான சிசுபாலன் கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையை சேர்ந்தவர். அவர் களியக்காவிளையில் ஒரு யானையை பராமரிக்கும் பணியில் முன்பு ஈடுபட்டிருக்கிறார். 

சிசுபாலன் அடிக்கடி திருச்செந்தூர் கோயிலுக்கு வருவாராம். அப்படி வரும்பொழுது அவரது உறவினரான உதயனையும் சந்தித்து விட்டு செல்வது வழக்கம். அதேபோல இன்றும் திருச்செந்தூர் கோவிலுக்கு வந்த சிசுபாலன் தனது உறவினரான உதவிப் பாகன்
உதயனை சந்திக்க விலாச மண்டபத்திற்கு அருகே யானை கட்டப்பட்டிருக்கும் பகுதிக்கு சென்று இருக்கிறார். அங்கு சென்று அவர் இந்த யானை கட்டப்பட்டிருக்கும் அறை செல்ல முற்பட்ட போது தான் இந்த கொடூரம் நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

முன்பே எச்சரித்த தெய்வானை யானை

குறிப்பாக தெய்வானை யானையைப் பொறுத்தவரை அது கட்டப்பட்டிருக்கும் அந்த அறைக்குள் மூன்று பாகங்களை தவிர வேறு யாரையும் அனுமதிக்காது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக சிசுபாலன் கோவிலுக்கு வந்த போது இதேபோல கூண்டுகள் வர முயற்சித்து இருக்கிறார். அப்பொழுது அவரை தெய்வானை யானை தள்ளி விட்டதாகவும், சக பாகன்களிடம் தற்போது உயிரிழந்த உதயன் முன்பு கூறியிருப்பதாகவும் சொல்கிறார்கள்.

இந்த நிலையில் தான் மீண்டும் இன்று சிசுபாலன் பாகன், உதயன் உடன் யானை கட்டப்பட்டிருக்கும் பகுதிக்குள் செல்ல முற்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக தனக்கு வேண்டாதவர் யாரோ உள்ளே வருவதாக கருதிதான் இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என மற்ற இரு பாகன்களும் கூறுகின்றனர். தெய்வானை யானை ஏற்கனவே ஒருமுறை எச்சரிக்கை விடுத்திருக்கிறது. தெய்வானை இருந்தும் இன்றும் இருவரும் உள்ளே செல்ல முற்படுகையில் இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என சக பாகன்கள் கருதுகிறார்கள்.

திருச்செந்தூர் கோவில் கோவில் யானை தாக்கி இருவர் உயிரிழந்த நிலையில் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. அவர்கள் வந்து பரிசோதித்ததில் தெய்வானை யானைக்கு மதம் பிடிக்கவில்லை என்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இருப்பினும் மிருகங்களுக்கு ஏற்படக்கூடிய அச்சம் அல்லது ஆக்ரோஷ குணத்தின் காரணமாகவே இந்தச் சம்பவம் நிகழ்ந்திருக்கிறது என வனத்துறையினர் தெரிவித்து இருக்கின்றனர்.

திருச்செந்தூர் கோவில் நடை அடைப்பு 

திருச்செந்தூர் கோவில் யானை தெய்வானை மிதித்து கோவில் வளாகத்திலேயே இருவர் இறந்த நிலையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் நடை சாத்தப்பட்டு, பரிகார பூஜைக்கு பின்னர் கோவில் நடை மீண்டும் திறக்கப்படும் என கோவில் நிர்வாகம் அறிவித்திருக்கிறது. புண்ணிய தான பரிகார பூஜைக்காக கோவில் நடை ஒரு மணி நேரம் சாத்தப்பட்டு இருக்கும், பரிகார பூஜைக்கு பின்பாக கோவில் நடை திறக்கப்பட்டு வழக்கம்போல் தரிசனம் நடைபெறும் எனவும் கோவில் நிர்வாகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தர்மபுரி தொகுதியில் போட்டியிடும் தளபதி விஜய்? தமிழக வெற்றிக் கழகம் அறிக்கை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News