திருச்சி - திருவனந்தபுரம் இன்டர்சிட்டி ரயில் சேவை மாற்றம்

பணி காரணமாக வரும் ஜனவரி 23 முதல் 28 ஆம் தேதி வரை ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என மதுரை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

ZEE Bureau ZH Web (தமிழ்) | Updated: Jan 22, 2020, 11:37 PM IST
திருச்சி - திருவனந்தபுரம் இன்டர்சிட்டி ரயில் சேவை மாற்றம்
File photo

மதுரை: பொறியியல் பணி காரணமாக ரயில் சேவையில் சில மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அதாவது மதுரை ரயில்வே கோட்டத்தில் நடைபெற்று வரும் பொறியியல் பணி காரணமாக ஜனவரி 23 முதல் 28 ஆம் தேதி வரை ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தேதிகளில் திருச்சி டூ திருவனந்தபுரம் இருபுறமும் இயங்கும் இன்டர்சிட்டி ரயில் சேவை வழக்கம் போல இயங்காது. 

அதிவிரைவு ரயில்: 22627 (திருச்சி - திருவனந்தபுரம்)
ஜனவரி 23, 24, 25, 26, 28 ஆகிய தேதிகளில் கோவில்பட்டி - திருவனந்தபுரம் இடையே இயங்காது. திருச்சி - கோவில்பட்டி இடையே மட்டும் இயங்கும்.

அதிவிரைவு ரயில்: 22628 (திருவனந்தபுரம் - திருச்சி)
ஜனவரி 23, 24, 25, 26, 28 ஆகிய தேதிகளில் திருவனந்தபுரம் - கோவில்பட்டி இடையே இயங்காது. கோவில்பட்டி - திருச்சி இடையே மட்டும் இயங்கும்.

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.