Tiruvallur Lok Sabha Election Result 2024: திருவள்ளூர் மக்களவைத் தொகுதியில் வெற்றி வாய்ப்பு யாருக்கு?

Tiruvallur Tamil Nadu Lok Sabha Election Result 2024: தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 19ம் தேதி மக்களவை தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றது. பாஜக, காங்கிரஸ் போன்ற கட்சிகள் திருவள்ளூர் தொகுதியில் போட்டியிட்டன.  

Written by - RK Spark | Last Updated : Jun 4, 2024, 08:58 AM IST
  • கடும் போட்டியில் திருவள்ளூர் தொகுதி.
  • காங்கிரஸ் கடந்த முறை வெற்றி பெற்றது.
  • அதிமுக நேரடியாக போட்டியிடவில்லை.
Tiruvallur Lok Sabha Election Result 2024: திருவள்ளூர் மக்களவைத் தொகுதியில் வெற்றி வாய்ப்பு யாருக்கு? title=

Tiruvallur Tamil Nadu Lok Sabha Election Result 2024: தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 19ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற்றது. அதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸ், நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டன. தமிழகத்தில் முக்கியமான மக்களவை தொகுதிகளில் ஒன்றாக திருவள்ளூர் தொகுதி உள்ளது. 2009ம் ஆண்டு புதிய மக்களவை தொகுதியாக திருவள்ளூர் உருவானது. 

இந்த தொகுதியில் சென்னை நகரின் சில பகுதிகளும் உள்ளது. 1950-களில் திருவள்ளூர் பெயரில் மக்களவைத் தொகுதி இருந்துள்ளது. கடந்த 2019 தேர்தலில் 71.68% வாக்குகள் பதிவானது. இந்த ஆண்டு  68.31 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதியில் பொன்னேரி (தனி), கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர், பூந்தமல்லி (தனி), ஆவடி மற்றும் மாதவரம் ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. 

மேலும் படிக்க | அருணாச்சலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அபார வெற்றி

திருவள்ளூர் மக்களவைத் தொகுதியில் உள்ள சட்டமன்ற தொகுதி விவரம்

கும்மிடிப்பூண்டி
பொன்னேரி (தனி) 
திருவள்ளூர்
பூவிருந்தவல்லி (தனி)
ஆவடி
மாதவரம்

திருவள்ளூர் மக்களவைத் தொகுதி மொத்த வாக்காளர்கள்

மொத்த வாக்காளர்கள் - 20,85,991         
ஆண் வாக்காளர்கள் - 10,24,149           
பெண் வாக்காளர்கள் - 10,61,457             
மூன்றாம் பாலினத்தவர் - 385 

திருவள்ளூர் மக்களவைத் தொகுதி வேட்பாளர்கள் யார்?

2024 மக்களவை தேர்தலில் திருவள்ளூர் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் பாலகணபதியும், தேமுதிக சார்பில் நல்லதம்பி என்பவரும், இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் சசிகாந்த் செந்தில் என்பவரும், நாம் தமிழர் கட்சி சார்பில் ஜெகதீஷ் சந்தர் என்பவரும் போட்டியிட்டனர். இரண்டு முறை வெற்றி பெற்றுள்ள அதிமுக இந்த தொகுதியில் இந்த முறை நேரடியாக போட்டியிடவில்லை. தனது கூட்டணிக்கு இந்த தொகுதியை ஒதுக்கியது.

திருவள்ளூர் மக்களவைத் தொகுதி வெற்றி வாய்ப்பு யாருக்கு?

கடந்த 2019 மக்களவை தேர்தலில் இந்த தொகுதியில் கடும் போட்டி நிலவியது. காங்கிரஸ் வேட்பாளர் ஜெயக்குமார் தற்போது எம்பியாக உள்ளார். இவர் 2019 தேர்தலில் 7,67,292 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுகவின் வேணுகோபாலை 3,56,955 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். 2009 மற்றும் 2014 தேர்தலில் அதிமுக தான் வெற்றி பெற்று இருந்தது. ஆனால் இந்த ஆண்டு தேர்தலில் அதிமுக நேரடியாக போட்டியிடவில்லை.

மேலும் படிக்க | Exit Poll: மேற்கு வங்கத்தில் யாருக்கு அதிக இடம் கிடைக்கும்... ரவீந்திரன் துரைசாமி கணிப்பு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEata

 

Trending News