தமிழக அரசு இன்னும் ஓரிரு தினங்களில் தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளது. புதிய அரசாங்கத்தின் பட்ஜெட் என்பதால் எந்தத் துறைக்கு எவ்வளவு ஒதுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் எழுந்துள்ளது.
மேலும் இந்த ஆண்டு முதன்முறையாக தமிழகத்தில் வேளான் துறைக்கான தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. அதன்படி ஆகஸ்ட் 14 அன்று வேளாண்மைத் துறைக்கென முதன்முதலாக தனி பட்ஜெட் (TN Budget 2021) தாக்கல் செய்யப்படுகிறது. இந்நிலையில் நேற்று தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தமிழகத்தின் நிதி நிலைமை பற்றிய வெள்ளை அறிக்கையை வெளியிட்டார்.
வெள்ளை அறிக்கையில் (white paper report) உள்ள தகவலின்படி தமிழகத்திற்கு ஐந்து லட்சம் கோடிக்கு மேல் கடன் உள்ளதாகவும், ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் ரூபாய். 2,63,976 கடன் சுமை கடன் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதைத்தொடர்ந்து நாமக்கல் அருகே தன்னை காந்தியவாதியாக காட்டிக்கொள்ளும் ரமேஷ் என்ற இளைஞர் ரூபாய் 2 லட்சத்து 63 ஆயிரத்து 976-க்கு காசோலையை பெரிய அட்டையில் தயார் செய்து நாமக்கல் கோட்டாட்சியரிடம் கொடுக்க வந்தார். அதனை வாங்க மறுத்த கோட்டாட்சியர் நாமக்கல் மாவட்ட ஆட்சியரை சந்தித்து அவரிடம் கொடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.
ஆனால் மாவட்ட ஆட்சியரும் இதனை வாங்க மறுத்துவிட்டார். அதனால் ஒவ்வொரு அரசு அலுவலகங்களுக்கும் காந்தி வேடம் அணிந்து காசோலை பதாகையை கொண்டு சென்று வருகிறார் அந்த இளைஞர்.
ALSO READ | வெள்ளை அறிக்கை வெளியிட்டார் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்: முக்கிய அம்சங்கள் இதோ
மேலும் வெள்ளை அறிக்கையில் 2006-2011 ஆம் ஆண்டில் இருந்த உபரி வருமானம் தற்போது சரிந்து விட்டது என பழனிவேல் தியாகராஜன் தெரிவித்திருந்தார். கடைசி 5 ஆண்டுகளில் 1 லட்சத்து 50 ஆயிரம் கோடி வருவாய் பற்றாக்குறை என்றும், அதனால் ஏற்பட்ட 3 லட்சம் கோடி பொதுக் கடனில் சரிபாதி தினச் செலவு என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.
மேலும் இன்று தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. ஆகஸ்ட் 13 ஆம் தேதி தொடங்கும் இந்த ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற செப்டம்பர் 21 ஆம் தேதி அன்று நிறைவடையும் என்றும், பட்ஜெட் மீதான விவாதம் 3 நாட்கள் நடைபெறும் எனவும் அதைத் தொடர்ந்து துறை சார்ந்த மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ALSO READ | TN Budget 2021-22: ஆக.13 முதல் செப். 21 வரை தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR