புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய வாக்காளர் அடையாள அட்டைகள்!

போலி அட்டைகள் உருவாக்கப்படாமல் தடுக்க, வாக்காளர் அடையாள அட்டைகள் பாதுகாப்பு அம்சங்களுடன் அச்சிடப்பட்டுள்ளன என்றும் சாஹூ கூறினார்.  

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 30, 2023, 06:48 PM IST
  • புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய வாக்காளர் அடையாள அட்டைகள்
  • பிப்ரவரி 27 ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
  • மார்ச் 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது.
புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய வாக்காளர் அடையாள அட்டைகள்!  title=

சென்னை: 16 லட்சம் புதிய வாக்காளர் அடையாள அட்டைகள் புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் அச்சிடப்பட்டுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ திங்கள்கிழமை தெரிவித்துள்ளார். ஈரோடு (கிழக்கு) சட்டமன்றத் தொகுதியில் முதற்கட்டமாக வாக்காளர்களுக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும் என்றும், பழைய அட்டை வைத்திருப்பவர்கள் புகைப்படம் மற்றும் இதர விவரங்களை மாற்றி புதிய அட்டையைப் பெறலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

புதிய வாக்காளர் அடையாள அட்டையில் QR குறியீடு வசதியுடன் மிகச் சிறிய எழுத்து இடம்பெற்றிருக்கும். வாக்காளர் அட்டைக்கு வெளியே ஒட்டப்பட்டிருந்த 'ஹாலோகிராம்' இனி அட்டையில் ஒட்டப்படும். அடையாள அட்டையின் முன்புறத்தில் வாக்காளரின் புகைப்படமும், அவரது 'நெகட்டிவ் இமேஜ்' படமும் இருக்கும்.

போலி அட்டைகள் உருவாக்கப்படாமல் தடுக்க, வாக்காளர் அடையாள அட்டைகள் பாதுகாப்பு அம்சங்களுடன் அச்சிடப்பட்டுள்ளன என்றும் சாஹூ கூறினார்.

வாக்காளர் அட்டையில் உள்ள சிறப்பு அம்சங்கள்:

ஹாலோகிராம் அளவு: 16mm X 12mm. ஹாட் ஸ்டாம்ப் செய்யப்பட்டிருக்கும். 19-23 வெள்ளி மைக்ரான் பாலியஸ்டர்களை கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும்.

மைக்ரோ டெக்ஸ்ட்: 19 முதல் 25 மைக்ரான் அளவிலான புகைப்படத்தின் எல்லையாக எழுத்துக்கள்.

கோஸ்ட் இமேஜ் பிரிண்டிங்: வாக்காளர் புகைப்படம் (முன் பக்கம்)

அட்டையின் அடிப்பகுதியில் உள்ள Guilloche பேட்டர்ன் (மூன்று வண்ண வடிவமைப்பு)

மேலும் படிக்க | Bypolls: அதிமுகவும் தேமுதிகவும் கூட்டு? எகிற வைக்கும் எதிர்பார்ப்பு! திமுக நிலை?

பிப்ரவரி 27 ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. மார்ச் 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. திமுக கூட்டணி சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளராக மறைந்த சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவேராவின் தந்தையும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் நிறுத்தப்பட்டுள்ளார்.

ஈபிஎஸ், ஓபிஎஸ் என இரு அணிகளாக பிரிந்து கிடக்கும் அவர்கள், இந்த தேர்தலில் தனித்தனியாக போட்டியிடும் முனைப்பில் உள்ளனர். பாஜக போட்டியிட்டால் அவர்களுக்கு ஆதரவளிப்பேன் என ஓபிஎஸ் கூறியிருக்கும் நிலையில், இரட்டை இலை சின்னத்துக்கு உரிமைகோரி எடப்பாடி பழனிசாமி உச்சநீதிமன்றத்தை நாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | ஆ.ராசாவின் நீலகிரி தொகுதியை குறி வைக்கும் பாஜக..!

மேலும் படிக்க | Budget 2023: ரியல் எஸ்டேட் துறையினரின் எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News