கேரளாவுக்கு மீண்டும் ரூ. 5 கோடி நிதியுதவி அளித்த தமிழக அரசு

பாதிக்கப்பட்ட கேரளா மக்களுக்கு பயன்பெறும் வகையில் மீண்டும் நிதியுதவி அளித்த தமிழக அரசு.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 18, 2018, 01:29 PM IST
கேரளாவுக்கு மீண்டும் ரூ. 5 கோடி நிதியுதவி அளித்த தமிழக அரசு title=

கேரளாவில் ஏற்ப்பட்ட வெள்ளத்தால் இதுவரை கிட்டத்தட்ட 5 லட்சக்கணக்கான பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதில் 3 லட்சத்துக்கு அதிகமான பேர் வீடுகளை இழந்துள்ளனர். மே மாதம் 29 ஆம் தேதி முதல் நேற்று (ஆகஸ்ட் 17) வரை பலியானவர்களின் எண்ணிக்கை 332 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 2094 நிவாரண முகாம்களில் சுமார் ஒரு லட்சத்துக்கு மேற்பட்டோர் தங்க வைக்கபட்டு உள்ளனர். மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் இன்று இந்திய நாட்டின் பிரதமர் மோடி அவர்கள் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். ஏற்கனவே கேரளாவுக்கு ரூ. 100 கோடி நிதியுதவி அளித்திருந்த நிலையில், இன்று மேலும் ரூ. 500 கோடி நிதியுதவி அளிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்த்துள்ளது. மத்திய அரசு சார்பில் இதுவரை ரூ. 600 கோடி நிதியுதவி அளிக்கப்பட்டு உள்ளது.

நீங்கள் செய்யும் உதவியால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கையை மீண்டும் உருவாக்க முடியும். தயவு செய்து நிதிஉதவி அளியுங்கள் என கேரளா முதல் அமைச்சர் பினராயி விஜயன் கோரிக்கை வைத்துள்ளார். 

இதனையடுத்து இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து கேரளாவுக்கு நிதியுதவி அளிக்கப்பட்டு வருகிறது. மாநிலங்களை பொருத்த வரை.. 

தெலுங்கான 25 கோடி 
கர்நாடக 10 கோடி,
பஞ்சாப் 10 கோடி,
டெல்லி 10 கோடி (யூனியன் பிரதேசம்)
தமிழ்நாடு 5 கோடி, 
ஆந்திரா 5 கோடி,
ஒரிசா 5 கோடி... போன்ற மாநிலங்கள் வழங்கியுள்ளது.

இந்நிலையில், இன்று தமிழக அரசு சார்பில் மீண்டும் பாதிக்கப்பட்ட கேரளா மக்களுக்கு ரூ. 5 கோடி நிதியுதவி அளிக்கப்படும் என தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். மேலும் கேரளா மாநிலத்திற்கு தேவையான நிவாரணப் பொருட்களாக 500 மெட்ரிக் டன் அரிசி, பால் பவுடர் மற்றும் பதப்படுத்தப்பட்ட பால் பாக்கெட்கள், வேட்டிகள், கைலிகள், 10,000 போர்வைகள் மருந்துகள் போன்ற அத்தியாவசிய பொருட்களுடன் தமிழக மருத்துவக்குழுக்களும் அனுப்பிவைக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

Trending News