30 நாட்களில் தீர்வு “மக்களுடன் முதல்வர்” திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்

Makkaludan Mudhalvar Scheme: பொது மக்கள் அளிக்கும் மனுக்கள் மீது 30 நாட்களுக்குள் உரிய முறையில் பரிசீலனை செய்யப்பட்டு உடனடியாக மக்களுக்கு சேவைகள் வழங்கும் 'மக்களுடன் முதல்வர்' திட்டத்தை தொடக்கி வைத்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.

Written by - Shiva Murugesan | Last Updated : Dec 18, 2023, 03:20 PM IST
30 நாட்களில் தீர்வு “மக்களுடன் முதல்வர்” திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் title=

What Is The Makkaludan Mudhalvar Scheme: தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசின் திட்டங்கள் எளிதாகவும் விரைவாகவும் பொது மக்களுக்கு கிடைக்க வழிவகை செய்யும் 'மக்களுடன் முதல்வர்' திட்டத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (திங்கட்கிழமை, டிசம்பர் 18) தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் மூலம் பொது மக்கள் கொடுக்கும் மனுக்கள் மீது 30 நாட்களில் தீர்வு காணப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

'மக்களுடன் முதல்வர்' திட்டம் - 30 நாட்களில் தீர்வு

கோயம்புத்தூர் எஸ்.என்.ஆர். கல்லூரி கலையரங்கத்தில் 'மக்களுடன் முதல்வர்' திட்டத்தை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த திட்டத்தை தொடங்கி வைத்த பிறகு, கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 27 மற்றும் 28வது வார்டு பகுதி மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, அதற்கான ஒப்புகை சீட்டுகளை தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார். அதேநேரத்தில் தமிழக அமைச்சர்கள் அவர்களுடைய மாவட்டங்களிலும், பொறுப்பு அமைச்சர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களிலும் 'மக்களுடன் முதல்வர்' திட்டத்தை தொடங்கி வைத்தனர். 

'மக்களுடன் முதல்வர்' திட்டத்தை தொடக்கி வைத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

அந்த வரிசையில் சேலம் மாவட்டத்தில் 'மக்களுடன் முதல்வர்' திட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தனது எக்ஸ் (X) பக்கத்தில், "

மக்களின் தேவைகளை நுணுக்கமாக கவனித்து, அதற்குரிய தீர்வுகளை வழங்குவதில் ஈடற்ற அரசாகத் திகழும் நம் திராவிட மாடல் அரசின் வெற்றிப் பாதையில் மேலும் ஒரு மைல் கல்லாக "மக்களுடன் முதல்வர்" திட்டம் உருவாகி இருக்கிறது.

கோவையில் இத்திட்டத்தை மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று தொடங்கி வைத்த நிலையில், சேலத்தில் நாம் இத்திட்டத்தை தொடங்கி வைத்தோம்.

மக்களின் கோரிக்கைகளை பரிசீலிக்க பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த அரங்குகளை ஆய்வு செய்து பொதுமக்களுடன் உரையாடினோம். மேலும், அங்கு பெறப்பட்ட மனுக்களில், உடனடியாக தீர்வு காணப்பட்டவற்றின் அடிப்படையில், 36 பயனாளிகளுக்கு மூன்று சக்கர வண்டி, காதொலி கருவிகள், தையல் எந்திரம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினோம். 

மக்கள் நலன் காப்பதில் புதிய புரட்சியை செய்துள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி.

#மக்களுடன்முதல்வர்" இவ்வாறு தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க - ரேசன் கடையில் இன்று முதல் ரூ. 6 ஆயிரம்... வாங்க எந்த நேரத்தில் போகலாம்?

"மக்களுடன் முதல்வர்" திட்டம் குறித்து முதல்வர் கூறியது..

கோவையில் "மக்களுடன் முதல்வர்" திட்டத்தை தொடங்கி வைத்த பிறகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியது,  "வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை, வீட்டு வசதி, கூட்டுறவு, எரிசக்தி துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை என 13 அரசு துறைகள் மூலம் மக்களுக்கு பல்வேறு சேவைகள் செய்யப்படுகிறது.

இந்த சேவைகளை பெறுவதில் அடித்தட்டு மக்கள் சிரமங்களை எதிர்கொள்கிறார்கள் என்று அரசுக்கு தெரிய வந்தது. இந்த சேவைகளை இணையத்தில் பதிவேற்றம் செய்யுதல், தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதில் மக்களுக்கு சில சிரமங்கள் இருந்தன.

இந்த சிரமங்களை போக்கி மக்களுக்கு உதவும் வகையில், "மக்களுடன் முதல்வர்" திட்டம் தொடங்கப்பட்டது. முதல்வரின் முகவரி துறையால் இது தொடங்கி வைக்கப்படுகிறது.

அரசின் சேவைகளை மக்களுக்கு நெருக்கமாக கொண்டு சென்று, எல்லா மக்களுக்கும் சேவைகளை கிடைக்கச் செய்வது தான் இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம். முகாம்களில் கொடுக்கப்படும் மனுக்கள் எல்லாம் சம்பந்தப்பட்ட துறைகளால் 30 நாட்களுக்குள் உரிய முறையில் பரிசீலனை செய்யப்பட்டு சேவைகள் மக்களுக்கு வழங்கப்படும் என்றார்.

 மேலும் படிக்க - கலைஞர் உரிமைத் தொகை பெறும் பெண்களுக்கு 7.5% வட்டி தரும் மலையரசி தொடர் வைப்பு திட்டம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News