மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 % இட ஒதுக்கீடு: மசோதா தாக்கல்!!

தற்போது நடைபெற்று வரும் தமிழக சட்டசபை கூட்டத்தில், மருத்துவக் கல்லூரிகளில், அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு 7.5 சதவீத ஒதுக்கீட்டை வழங்க தமிழக அரசு ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 15, 2020, 04:47 PM IST
  • NEET தேர்வுகளில் வெற்றிகரமாக தேர்ச்சிபெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகிதம் இட ஒதுக்கீடு.
  • முதல் துணை பட்ஜெட் செப்டம்பர் 16 அன்று சபையில் தாக்கல் செய்யப்படும்.
  • சட்டசபை அமர்வு தொடங்குவதற்கு முன்னதாக, அனைவரும் கொரோனா சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர்.
மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 % இட ஒதுக்கீடு: மசோதா தாக்கல்!! title=

கொரோனா வைரசால் (Corona Virus) பரவியுள்ள நோய்த்தொற்று காரணமாக தமிழக சட்டசபை இடம் மாற்றப்பட்டு கலைவாணர் அரங்கில் (Kalaivanar Arangam) நடைபெற்று வருகிறது. தனி மனித இடைவெளியையும் கொரோனா நோய்த்தொற்றுக்கான மற்ற வழிக்லாட்டுதல்களையும் கருத்தில் கொண்டு இந்த மாற்றம் செய்யப்பட்டது.

தமிழக சட்டமன்றத்தின் (Tamil Nadu Assembly) அமர்வு இரங்கல் தீர்மானத்துடன் தொடங்கியது. முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, திமுக எம்.எல்.ஏ ஜே.அன்பஜாகன், காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் ஆகியோரது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

NEET தேர்வுகளில் (NEET Exam) வெற்றிகரமாக தேர்ச்சிபெறும் அரசு பள்ளியில் படித்த தகுதியான மாணவர்களுக்கு 7.5 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்குவதற்கான முக்கியமான தீர்மானத்தை (Resolution) தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி (K Palanisamy) தாக்கல் செய்தார்.

ALSO READ: NEET தேர்வு காரணமாக 13 பேர் தற்கொலைக்கு திமுகவே காரணம்: முதல்வர் ஆவேசம்!!

தீர்மானம் உடனடியாக எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் நிறைவேற்றப்பட்டது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமர்வு அடுத்த இரண்டு நாட்களில் கேள்வி நேரத்துடன் (Question Hour) தொடங்கும். முதல் துணை பட்ஜெட் (Supplementary Budget) செப்டம்பர் 16 அன்று சபையில் தாக்கல் செய்யப்படும்.

சட்டசபை அமர்வு (Assembly Session) தொடங்குவதற்கு முன்னதாக, முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் (O Panneerselvam), சபாநாயகர் பி தனபால், சட்டமன்ற அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் ஊடகவியலாளர்கள், அனைத்து எம்.எல்.ஏ.க்க என அனைவரும் கொரோனா சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர்.  இரண்டு அதிகாரிகளைத் தவிர மற்ற அனைவரது COVID-19 பரிசோதனைகளும் எதிர்மறையாக வந்தன. 

ALSO READ: Sep 14: தமிழக சட்டசபை கூடும் முன் COVID test செய்து கொண்டனர் EPS, OPS மற்றும் பலர்!!

Trending News