NEET தேர்வு காரணமாக 13 பேர் தற்கொலைக்கு திமுகவே காரணம்: முதல்வர் ஆவேசம்!!

நீட் தேர்வால் சுமார் 13 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதற்கு திமுகவே காரணம் என முதல்வர் ஆவேசமாக பேசியுள்ளார்!!

Last Updated : Sep 15, 2020, 01:11 PM IST
 NEET தேர்வு காரணமாக 13 பேர் தற்கொலைக்கு திமுகவே காரணம்: முதல்வர் ஆவேசம்!! title=

நீட் தேர்வால் சுமார் 13 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதற்கு திமுகவே காரணம் என முதல்வர் ஆவேசமாக பேசியுள்ளார்!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இரண்டாம் நாளான இன்று கேள்வி நேரத்துடன் தொடங்கியது. அப்போது, மத்திய அரசின் நீட் தேர்வால் மாணவர்கள் உயிரிழந்த விவகாரம் குறித்து பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதை தொடர்ந்து நடந்த விவாதத்தில் நீட் தேர்வு குறித்து அதிமுக மேல் பழிபோடுவதாக பேசப்பட்ட நிலையில் காங்கிரஸ் கூட்டணியில் திமுக இருந்தபோதுதான் நீட் கொண்டுவரப்பட்டது என முதல்வர் கேள்வி எழுப்பினார். 

சட்டப்பேரவை கூட்டத்தொடரின் துவக்க உரையில் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜுகொளத்தூர் தொகுதியில் 20 புதிய ரேஷன் கடைகள் அமைக்கப்படும் என்றார். அதேபோல் விஜயபாஸ்கர் உள்ளிட்ட அமைச்சர்கள் பல்வேறு அறிவிப்புக்களை வெளியிட்டனர். இதனிடையே நீட் தேர்வால் மாணவர்கள் தற்கொலை செய்வது குறித்து விவாதிக்க வேண்டும் என திமுக சார்பில் மனு அளித்திருந்தது. 

ALSO READ | செப்டம்பர் 25 முதல் மீண்டும் கடுமையான ஊரடங்கு - மத்திய அரசு விளக்கம்!!

இதை தொடர்ந்து கருணாநிதி முதல்வராக இருந்த போது நீட் தேர்வு நடைபெற்றதில்லை என்ற ஸ்டாலின் சட்டப்பேரவையில் பேசினார். இதையடுத்து,  நீட் தேர்வு விவகாரம் குறித்து பேசிய முதல்வர் பழனிசாமி, “நீட் தேர்வினால் 13 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதற்கு திமுக தான். நீட் எப்போது வந்தது? யார் அறிமுகப்படுத்தினார்கள் பதில் சொல்லுங்கள்” என்று பேரவையில் ஆவேசமாக கேள்வி எழுப்பினார். மேலும் 2010-ல் மத்தியில் திமுக – காங்., ஆட்சியில் இருந்தபோது தான் நீட் தேர்வுக்கு அவசர சட்டம் கொண்டு வரப்பட்டது என்றும் கூறினார்.

இதை தொடர்ந்து பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர் ”பாம்புக்கு பால் வார்த்தது யார்? நீட் தேர்வை முதன்முதலில் கொண்டு வந்தது யார்? பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டி விடுவது திமுகவிற்கு கை வந்த கலை” என்று பேசியுள்ளார். 

Trending News