கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலித்த மருத்துவமனைகள் மீது TN Govt கடும் நடவடிக்கை

அதிக கட்டணம் வசூலித்த மருத்துவமனைகளின் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் அதிக கட்டணம் வசூலித்த மருத்துவமனைகளின் பட்டியலும் இணைக்கப்பட்டு உள்ளது.

Written by - Shiva Murugesan | Last Updated : Oct 15, 2020, 07:41 PM IST
கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலித்த மருத்துவமனைகள் மீது TN Govt கடும் நடவடிக்கை title=

Corona Treatment Fees: நாடு முழுவதும் கொரோனா காரணமாக மக்கள் அச்சத்தில் உள்ளனர். கொரோனா தொற்று (COVID-19 Pandemic) ஏற்பட்டவர்கள் எப்படியாவது தங்களை காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்ற நிலையில் அரசு அல்லது தனியார் மருத்துவனையில் சிகிச்சை பெற்றுக்கொள்ள அட்மிட் ஆகிறார்கள். ஆனால் சில மருத்துவமனைகள் மக்களின் பயத்தை பயன்படுத்தி, கொரோனா சிகிச்சை (Corona Treatment) என்ற பெயரில் அதிக கட்டணம் வசூலித்து வருகின்றனர். இதுக்குறித்து பலர் தனது சமூக வலைத்தளத்திலும், சம்பந்தப்பட்ட அதிகரிகளிடமும் புகார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

இதுபோன்ற புகார்களை அடிப்படையில் தமிழக அரசு (TN Govt) தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில், தற்போது அதிக கட்டணம் வசூலித்த மருத்துவமனைகளின் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுத்துள்ளது.

READ ALSO | Watch: பட்டியிலனத்தவரை இழிவுபடுத்திய தேவர் சமூகத்தைச் சேர்ந்தவர்களை கைது செய்த காவல்துறை

இதுவரை 27 தனியார் மருத்துவமனைகள் (Private Hospital) மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதில் 9 மருத்துவமனைகளின் உரிமம் தற்காலிக ரத்து செய்துள்ளது. எந்த மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என தமிழக சுகாதாரத்துறை தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது.

அதிக கட்டணம் வசூலித்த மருத்துவமனைகளின் பட்டியல்: 

charge higher rates for corona treatment

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News