சொன்னபடி வேலைநிறுத்தம் - போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவிப்பு

Last Updated : May 14, 2017, 04:50 PM IST
சொன்னபடி வேலைநிறுத்தம் - போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவிப்பு title=

இன்று நடைபெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுடன் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை யொட்டி நாளை முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்ததில் ஈடுபடயுள்ளனர்

13_வது ஓய்வூதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும், ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு அவர்களின் நிலுவைத் தொகையை கணக்கிட்டு வழங்கிட வேண்டும், போக்குவரத்து துறையில் ஏற்பட்டு இருக்கும் நஷ்டத்துக்கு அரசே பொறுப்பேற்று அதனை ஈடுசெய்ய வேண்டும் உள்பட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து துறை நிர்வாக பிரதிநிதிகளுடன், தொழிற்சங்க பிரதிநிதிகள் 2 கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

இந்நிலையில் இன்று இறுதி கட்ட பேச்சு வார்த்தை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்றது. 

இந்த பேச்சுவார்த்தையில் போக்குவரத்து ஊழியர்களுக்கு ரூ.1,250 கோடி தர அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஒப்புதல் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியது. ஆனால் இந்த நிலுவை தொகையை தருவது என்பது குறைவானது என்று போக்குவரத்து தொழிற்சங்க பிரதிநிதிகள் கூறினார்கள்.

எனவே திட்டமிட்டபடி நாளை வேலைநிறுத்தம் தொடங்கும் என போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்து உள்ளன.

தமிழகத்தின் சில பகுதிகளில் வேலை நிறுத்த போராட்டம் தொடங்கிவிட்டது என தகவல் வந்துள்ளது.

Trending News