இந்தியா முழுவதும் பீதியைக் கிளப்பி பலவித பாதிப்புகளை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை மெல்ல குறைந்து வருகிறது. தமிழகத்திலும் இரண்டாம் அலையின் தீவிரம் கட்டுக்குள் வந்துகொண்டிருக்கும் நிலையில், அடுத்தடுத்த கட்ட ஊரடங்குகளில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
ஏப்ரல், மே மாதங்களில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய கொரோனா தொற்று (Coronavirus) பாதிப்பு படிப்படியாக குறைந்துகொண்டு இருக்கின்றது. மே 21 ஆம் தேதி 36,000 என்ற எண்ணிக்கையை கடந்தது ஒரு நாள் தொற்று எண்ணிக்கை. கடுமையான தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகள், ஊரடங்கு ஆகியவற்றின் காரணமாக இந்த எண்ணிகை தற்போது வெகுவாக குறைந்துள்ளது. இறப்பு எண்ணிக்கையிலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இது பெரிய அளவில் நிவாரணம் அளிக்கும் வகையில் உள்ளது.
தற்போது உள்ள ஊரடங்கு 12 ஆம் தேதி காலையுடன் நிறைவடையும் நிலையில். அடுத்த கட்ட ஊரடங்கில் இன்னும் அதிக அளவு தளர்வுகள் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஏற்கனவே தொற்று எண்ணிக்கை குறைவாக உள்ள சென்னை (Chennai) உள்ளிட்ட மாவட்டங்களில் கிட்டத்தட்ட இயல்பு வாழ்க்கை திரும்பி விட்டது. மேலும் அதிக தளர்வுகள் அளிக்கப்பட்டால், அது மக்களுக்கு இன்னும் உதவியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
அடுத்த கட்ட ஊரடங்கு (Lockdown) குறித்து இன்று மாலை அல்லது நாளை காலைக்குள் அரசு அறிவிப்பை வெளியிடக்கூடும். அடுத்த கட்ட ஊரடங்கில் பின்வரும் தளர்வுகள் அறிவிக்கப்படலாம் என கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
- தற்போது பொதுப் போக்குவரத்துக்கான அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் பேருந்துகளில் பயணிக்கத் தொடங்கியுள்ளனர். எனினும், பேருந்துகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், அவற்றில் கூட்டம் மிக அதிகமகா உள்ளது. இதனால் தொற்று பரவும் அபாயம் அதிகமாக உள்ளது. அடுத்த கட்ட ஊரடங்கில் அதிக பேருந்துகளை இயக்குவதற்கான அனுமதி அளிக்கப்படலாம்.
- தற்போது கடைகள் மற்றும் அங்காடிகள் இரவு 8 மணி வரை திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது இரவு 10 மணி வரை நீட்டிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ALSO READ: COVID-19 Update: தமிழகத்தில் 3039 பேர் கொரோனாவால் பாதிப்பு, 69 பேர் உயிரிழப்பு
- தேநீர் கடைகள் மற்றும் உணவகங்களில் 75 சதவிகிதம் பேருக்கு அனுமதி அளிக்கப்படலாம்.
- அடுத்த கட்ட ஊரடங்கில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை திறப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்றாலும் ஆகஸ்ட் முதல் வாரத்தில் கல்வி நிறுவனங்களை திறப்பது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது.
- திரையரங்க உரிமையாளர்களும் தங்கள் கோரிக்கைகளை விடுத்துள்ள நிலையில், உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் 50 சதவிகித பார்வையாளர்களுடன் திரையரங்குகள் திறக்கப்படலாம் என்றும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், நேற்று தமிழ்நாட்டில் 3,039 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,13,098 ஆக உயர்ந்தது. சென்னையில் மட்டும் நேற்று 180 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டது. நேற்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 69 பேர் இறந்தனர். இதனுடன் தமிழகத்தில் தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 33,322 ஆக அதிகரித்தது. நேற்றைய நிலவரப்படி சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 33,224 ஆக இருந்தது.
திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், நாகப்பட்டினம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், சிவகங்கை, தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் புதிய தொற்று எண்ணிக்கையில் சிறிய ஏற்றத்தைக் காண முடிந்தது.
ALSO READ: தமிழ்நாட்டில் மாவட்ட வாரியாக இன்றைய கோவிட் பாதிப்பு நிலவரங்கள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR